ராகுபகவான் எந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்றால் என்ன பலன்?

பொதுவான விதி என்னவென்றால் ராகு- கேது பகவான்கள் அமர்ந்திருக்கும் வீட்டுக்கதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது ஒரு பலமான அமைப்பு என்று கூறவேண்டும்.
ராகுபகவான் எந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்றால் என்ன பலன்?
Published on
Updated on
1 min read

பொதுவான விதி என்னவென்றால் ராகு- கேது பகவான்கள் அமர்ந்திருக்கும் வீட்டுக்கதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது ஒரு பலமான அமைப்பு என்று கூறவேண்டும்.

மேஷ ராசியில் ராகுபகவான் அமர்ந்து தசையை நடத்தினால் யோகம் ஓரளவுக்கு குறைந்தாலும் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.

ரிஷப ராசியில் ராகுபகவான் நின்று தசையை நடத்தினால் ஏகப்பட்ட செலவினங்களை முன்னிட்டு செய்யப்படுபவை அவை: மாடு, கன்றுகள், வாகனங்கள் இவையெல்லாம் சேரும்.

கடக ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் சமூகத்தில் ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி வாகை சூடி, கெட்டிக்காரரென பெயரெடுப்பார்கள். ஜாதகருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தொல்லை கொடுக்கலாம் என்பதால் இந்த தசை முடியும் வரை ஜாதகர் உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

கன்னி ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் பெரியவர்கள் யாருக்காவது கண்டம் கொடுக்கத் தவறுவது இல்லை. ஆனால் கல்வி வளமும் அயல்நாட்டுப் பயணங்களும் அடிக்கடி நிகழும்.

மகர ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் நல்லவர்கள் வல்லவர்கள் என்று பெயரெடுக்கலாமே தவிர, பொருள் சேர்வது கடினம். அப்படி பொருள் சேர்ந்தாலும் பலருக்கு கொடுத்து விடுவார்கள். ஜாதகருடைய கணிப்பு கண்ணோட்டம் தவறிவிடும். தவறான நெறியற்ற வழிகளில் அறவே செல்லக்கூடாது.  இப்படிச் செய்தால் பெருத்த அவமானத்தைச் சந்திக்க நேரிடும்.

பொதுவாக, பலமற்ற ராகுபகவான் தன் தசை காலத்தில் குடும்பத்தில் வயது முதிர்ந்தவர் யார் இருந்தாலும் கண்டம் ஏற்படும். நாற்கால் ஜீவன்கள் தொலைந்து போகும். குடும்பத்தில் பிரிவினை உண்டாகும். சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க முடியது. இடம் விட்டு இடம் மாற வேண்டிய அவசியம் நிச்சயம் வரும். சிலருக்கு உட்கொள்ளும் மருந்தும் உணவும் கூட மயக்கத்தை உண்டு பண்ணிவிடும்.

பலமுள்ள ராகுபகவானின் தசையில் நல்ல வருவாய், சந்தோஷம், செல்வம், செல்வாக்கு ஆகியவைகள் அபரிமிதமாக உண்டாகும். தினங்களில் ராகுகாலம், எமகண்டம் ஆகியவை ராகு- கேது பகவான்களுக்குரியதாகும். தினமும் ராகு காலம் ஒன்றரை மணி நேரமும், எமகண்டம் ஒன்றரை மணி நேரமும் கொண்டு மூன்று மணி நேரத்தை ஒரு நாளில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு வாரத்தில் இவர்களுக்கு 21 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேதுபகவான் ஞான மோட்சத்திற்குரிய காரகத்துவத்தைப் பெற்றுள்ளார். இதனால் லக்னத்திற்கு கடைசி ஸ்தானமாகியப் பனிரெண்டாமிடத்தில் கேதுபகவான் இருந்தால் அந்த ஜாதகருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஜோதிட விதி.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகுமஹா தசை ஏழாவது தசையாக வரும். அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை ஐந்தாவது தசையாக வரும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com