யார் அந்த ராகு - கேது பகவான்கள்? 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை உண்ண தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே..
யார் அந்த ராகு - கேது பகவான்கள்? 
Published on
Updated on
1 min read

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை உண்ண தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டா போட்டியை தீர்த்து வைக்க மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களைத் தன் அழகால் வசியப்படுத்தி அமுதத்தை தேவர்களுக்குப் பெரும் பகுதியை வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது சுவர்பானு என்கிற அசுரன் (இவர் சூரியபகவானின் ஐந்தாவது மனைவிக்குப் பிறந்தவர்) தனக்கு அமுதம் கிடைக்காது என்று உணர்ந்து சூரிய சந்திரபகவான்களுக்குக்கிடையே தேவர் ரூபமெடுத்து அமர்ந்து அமுதத்தை வாங்கி உண்டார்.

இதனை, சூரிய, சந்திர பகவான்கள் மஹாவிஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்தனர். ஸ்ரீ மஹாவிஷ்ணு தன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் தலை முதல் மார்பு வரை தனியாக கழன்று தனியாக உருண்டது. உடல் தனியாக வேறு இடத்தில் விழுந்தது.

அமுதம் உண்டதால் தலை பாகமும் உடல் பாகமும் உயிரோடு இருந்தன. தலை பாகத்தை மைடினஸன் என்கிற மன்னன் எடுத்து வளர்த்து ராகுபகவானாகி தன் கடும் தவத்தால் பாம்பு உடலைப் பெற்று கிரக அந்தஸ்தும் பெற்றார். தனியாக விழுந்து கிடைந்த உடல்பாகத்தை மினி என்கிற அந்தணர் வளர்த்து கேதுபகவானாகி ஞானமார்க்கங்களை அவரிடம் கற்று, விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பாம்புத் தலையை பெற்று கிரகப் பதவியை அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com