ஜூலை மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் - மைனஸ்!

இன்றைய ஆன்மிக தகவலில் ஜூலை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்,
ஜூலை மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் - மைனஸ்!

இன்றைய ஆன்மிக தகவலில் ஜூலை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம்? அதிர்ஷ்ட கிழமைகள் என்ன? என்பதைப் பற்றி ஒருவரி  பலன்களாகப் பார்ப்போம். 

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது தொழிலில் மாற்றம் ஏற்படும். மைனஸ் என்றால் சுபநிகழ்வுகளில் சுணக்கம் ஏற்படும். 

பரிகாரமாக முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

{pagination-pagination}
ரிஷப ராசி அன்பர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது பணநடமாட்டம் சுமூகமாக இருக்கும். மைனஸ் வண்டி வாகனங்கள் இயக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். 

பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

{pagination-pagination}

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். மைனஸ் வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்.

பரிகாரமாக பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

{pagination-pagination}

கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது பூமி யோகம் உண்டாகும். எதிலும் அவசரமாக செயல்படுவது இவர்களின் மைனஸாக இருக்கும். 

பரிகாரமாக அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமூகமாக முடியும். மனக்குறை நீங்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

{pagination-pagination}

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது சுபநிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவது உங்களின் மைனஸாக இருக்கும். 

பரிகாரமாக பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வது நன்மை தரும். பொருளாதார ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

{pagination-pagination}
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது தொழில் மாற்றம் ஏற்படும். மைனஸ் வீடு மனை விஷயங்களை கையளுவதில் கூடுதல் கவனம் தேவை. 

பரிகாரமாக - ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்; 

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26,

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

{pagination-pagination}

துலா ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது பணவரவு அதிகரிக்கும். மைனஸ் வேலை செய்யும் இடத்தில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். 

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

{pagination-pagination}
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை அகலும். உங்களின் மைனஸ் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

{pagination-pagination}

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தின் பிளஸ் என்றால் அது பணவரவு - பொருள் வரவு அதிகரிக்கும். இந்த மாத மைனஸ் என்றால் அது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5,

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

{pagination-pagination}
மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது தொழில் உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் கிடைக்கும். மைனஸ் புதிய முதலீடுகளில் கவனம் தேவை.
 
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

{pagination-pagination}
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் பிளஸ் என்றால் அது முன்னோர்கள் அனுக்ரஹம் கிடைக்கும். மைனஸ் என்றால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

{pagination-pagination}
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனைத்து விதத்திலும் நன்மை ஏற்படும். மைனஸ் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது நல்லது. 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30, 31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com