வந்துவிட்டது அந்த நாள்! சயன கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!!

நாம் அனைவரும் காத்திருந்த அந்தநாள் இன்று வந்துவிட்டது. ஆம், 40 ஆண்டுகளுக்கு..
வந்துவிட்டது அந்த நாள்! சயன கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!!


நாம் அனைவரும் காத்திருந்த அந்தநாள் இன்று வந்துவிட்டது. ஆம், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்திவரதர் இன்று காலை முதல் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளார். 

தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பு கொண்ட ஆன்மிகத் தலமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்கான வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு இந்தாண்டு கிடைத்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் ஆதி அத்திவரதர் இன்று காலை 5 மணி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்குப் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, 28 நாட்கள் சயன கோலத்திலும், 20 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். 

ஆதி அத்திவரதர் எதற்காக குளத்தில் வைக்கப்பட்டுள்ளார்.. தெரிந்துகொள்வோம். 

அபூர்வ அத்தி வரதர் சிலை கடந்த 28-ம் தேதி அனந்த சரஸ் திருக்குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்குக் கோயில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷனம் புண்ணியாவதனம் ஹோமம் செய்தனர். இதைத்தொடர்ந்து அத்தி வரதருக்கு தைலக் காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்குப் பின்னர் வசந்த மண்டபத்தில் இன்று காலை 5.00 அத்திவரதர் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

லட்டு, ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் நிவேதனமாகப் படைக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின்னர், காலை 5 மணி முதல் அத்தி வரதரை தரிசிக்கப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அலை அலையாய் திரண்ட வண்ணம் உள்ளனர். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை அத்திவரதை சிறப்பு தரிசனம் செய்தார். இந்தாண்டு, அருளாளர் அத்தி வரதரை காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், பக்தர்களுக்குத் தேவையான தங்கும் வசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் காஞ்சிபுரம் மாநகராட்சி செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com