புஷ்கர நவாம்சம் ஒருவருக்கு எப்போது யோகபலனை தரும்!

சட்டத்தில் பல நுணுக்கங்கள் போல ஜோதிடத்தில் பல சூட்சம விதிகள் உள்ளது. அவற்றில்..
புஷ்கர நவாம்சம் ஒருவருக்கு எப்போது யோகபலனை தரும்!
Published on
Updated on
3 min read

சட்டத்தில் பல நுணுக்கங்கள் போல ஜோதிடத்தில் பல சூட்சம விதிகள் உள்ளது. அவற்றில் ஒன்று புஷ்கர நவாம்சம் அல்லது புஷ்கராம்சம் என்று ஒரு விதி கோட்பாடு உண்டு. புஷ்கர என்றால் தாமரை பூ, அதிக ஆற்றல், மத்தளத்தின் தோல், குட்டை போன்ற பொருள் தரும். புஷ்கராம்சம் என்பது புஷ்கர பாகம் என்றும் அழைக்கப்படும். 

இதனை வைத்து நாம் ஒருவரது அந்தஸ்து மற்றும் உயர் நிலையை அறியலாம். முக்கியமாக ராசி மற்றும் நவாம்ச கட்டத்தின் வாயிலாகப் பார்த்து பின்பு இந்த யோகத்தைப் பார்க்கவேண்டும். புஷ்கராம்சம் பற்றிய விவரம் நிறையப் புத்தங்களில் வெவ்வேறாக எழுதப்பட்டுள்ளது. நாரதீயம் என்னும் புத்தகத்தில் திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் வரும் அமாவாசையின் இரவு புஷ்கராம்சம் எனக் கூறுகிறது மற்றும் ஜாதக பாரிஜாதத்தில் ஒரு பாடலில் ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரஹங்கள் பலவீனமாக இருந்தாலும் சில சமயங்களில் அது அவருக்கு வேறு வகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது அந்த கிரகம் புஷ்கராம்சத்தில் உள்ளது.

வர்கோத்தமே வா யதி புஷ்கராம்சே சாரேந்துதேவேந்தகுரெள ந்ருபால: 

கர்மஸ்திதே சோபநத்ருஷ்டியுக்தே ஸம்பூர்னகாத்ரே சசினி் க்ஷிதிச:             

இதன் பொருளானது சந்திரன் வர்கோத்தமம் அல்லது புஷ்கராம்சத்தில் இருந்து, குருபகவான் செவ்வாயுடன் தொடர்பு பெற்றால் அரசன் பிறப்பதாக ஜாதக பாரிஜாதம் கூறுகிறது. இந்த பாடலின் ஆசிரியர் ஜாதக பாரிஜாதத்தில் வர்கோத்தமம் புஷ்காரம்சமும் ஒரே மாதிரியான பலம் என்று கூறப்படுகிறது. ஆனால் என்னுடைய ஆராய்ச்சியில் சில செயல் கொஞ்சம் மாறுபட்டுள்ளது. மற்றொரு ஜோதிட வல்லுநர் திரு.CS பட்டேல் இவற்றின் விரிவான விளக்கம் எழுதப்பட்டு மற்றும் பல உதாரண ஜாதகங்களுடன்  விளக்கியுள்ளார். 

புஷ்கராம்ச யோகத்தைப் பற்றி நான் படித்ததை எளிமையாகக் கூறுகிறேன். கேது, செவ்வாய், புதன் கிரகங்களின் நட்சத்திரங்கள் புஷ்காரம்சத்தில் அடங்காது. மற்ற கிரகங்களான சூரியனின் நட்சத்திர 1,4-ம் பாதம் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்); சந்திரனின் 2ம் பாதம் (ரோகிணி, அஸ்தம், திருவோணம்); குருவின் 2, 4-ம் பாதம் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி); சுக்கிரனின் 3ம் பாதம் (பரணி, பூரம், பூராடம்), சனியின் 2-ம் பாதம் (பூசம், அனுசம், உத்திரட்டாதி); ராகுவின் 4ம் பாதம் (திருவாதிரை, சுவாதி, சதயம்) புஷ்கராம்ச கட்டத்தில் அடங்கும். புஷ்கராம்சம் என்பது 12 ராசிகளில், ஒவ்வொரு ராசியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இரண்டு நட்சத்திர பாதம் அடங்கும்.  

மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் காலில் கிரங்கங்கள் அமரும்பொழுது புஷ்கராம்ச யோகபலனை கொடுக்கும். சிலருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனம் என்று நினைத்தால், அந்த கிரகங்கள் படிப்படியான உயர்வைக் கொடுத்து பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது. அதற்கு முக்கியமாக அந்த கிரகங்கள் புஷ்கராம்சம் கொண்ட நட்சத்திரத்தில் உள்ளது. ஜோதிடர்கள் இந்த யோகத்தைச் சொல்லும்பொழுது பஞ்சபூத தத்துவ ராசியின் தன்மை பார்த்து பலனைச் சொல்ல வேண்டும்

ஜாதகருக்கு ஏற்படும் புஷ்கர நவாம்ச யோகம்

முதலில் உள்ள லக்னம் புஷ்கர நவாம்ச காலில் அமர்ந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு யோகம் அமைந்து கொண்டு இருக்கும். லக்னாதிபதி லக்கினத்தில் ஆட்சி பெற்ற  இருந்து புஷ்கர நவாம்சம் பெற்று மற்ற யோகங்கள் இருந்தால் உலகப்புகழ் பெறும் அமைப்பு அந்த ஜாதகருக்கு உண்டு.

ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் புஷ்கராம்சத்தில் நின்றால் அந்த ஜாதகர் மதிக்க தக்கவராகவும், அதிர்ஷ்டம் உடையவராகவும்  இருப்பார். அவர் கடவுளின் அருள் பெற்ற ஜாதகராக திகழ்வார். இவற்றைப் பற்றி பலர் பல்வேறு நூல்களில் எழுதப்பட்டுள்ளது.     

இந்திய ஜோதிடர்களால் துல்லியமாகப் பார்க்கப்படும் ராசி, நவாம்ச சக்கரம், வர்க்க கட்டங்கள், அஷ்டவர்க்கம், புஷ்கராம்சம் போன்றவை உறுதியான பலனைக் கொடுக்கும். 

ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சம் பகை மற்றும் வலுவற்று இருந்தாலும், அந்த கிரகம் புஷ்கார நட்சத்திர காலில் இருந்தால் அது நல்ல நிலையைக் கொடுக்கும் என்பது ஒரு விதி. 

புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர மற்றும் திரிகோணங்களில் இருந்தால் ஜாதகருக்கு இன்னும் அதீத யோக பலன்களைத் தர வல்லது. 

புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் ராசியில் இருக்கும் இடத்திலிருந்து நவாம்சத்தில் மறைவு (6,8,12) பெற்று இருந்தால் புகழைத் தந்தாலும் தீமையைத் தரும் ஜோதிட வல்லுநர் CS பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

யோகாதிபதிகள் இந்த புஷ்கராம்சத்தில் இருந்தால் மாபெரும் யோகத்தைத் தனது திசாபுக்திகளில் அளித்து உறுதியாகப் பெரிய பதவி, செல்வம், மகிழ்ச்சியை நிச்சயமாகத் தருவார்கள்.

ஒவ்வொரு புஷ்கராம்ச பாதமும் பயன்மிக்க கிரகங்கள் அமர்ந்து அதன் பலத்தைக் கூட்டும் இவற்றில் மூன்று புஷ்கர நவாம்சம் வர்கோத்தமம் அடையும் அதுவும் மிகச்சிறந்த வலுவினை கொடுக்க வல்லது.

தசை புத்தி காலங்களில் புஷ்கராம்ச சுபக் கிரகங்கள் அதிக பலனை அள்ளித்தரும் நேரம். கோசார காலங்களில் சுபக் கிரகங்கள் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் செல்லும்பொழுது அதிக நன்மை தரும்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜோதிட நிலையம் 

ஜோதிட சிரோன்மணி தேவி

whats App:8939115647

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com