27-ம் நாளில் சாம்பல் நிறப் பச்சையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவின் 27-வது நாளான இன்று சாம்பல் நிறப் பச்சையில் நீல வண்ண சரிகையில் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். 
27-ம் நாளில் சாம்பல் நிறப் பச்சையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவின் 27-வது நாளான இன்று சாம்பல் நிறப் பச்சையில் நீல வண்ண சரிகையில் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 17 வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் எம்பெருமாள்.

அத்திவரதர் பெருவிழாவின் 26-ஆவது நாளான நேற்று அத்திவரதர் திராட்சை, ஏலக்காய், லவங்கம் வைத்து செய்யப்பட்ட முத்து கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெருமாளுக்கென பிரத்யேகமாக வெட்டிவேரால் செய்யப்பட்ட மாலை, அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு, உலர் திராட்சை ஆகியனவற்றால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன.

முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்த பக்தர்கள் வெளியில் வரமுடியாமலும், வெளியில் இருக்கும் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். இதனால், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலானது.

முக்கிய பிரமுகர்கள் பரிந்துரையின்பேரில் சிறப்பு அனுமதிச்சீட்டு வாங்கிய பலரும் அதை கையில் வைத்துக் கொண்டு தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்ட போது மாவட்ட நிர்வாகம் தரும் அனுமதிச்சீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என்றதால் காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அத்திவரதரை தரிசிக்கும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 26 நாட்களில் 35 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட ஆட்சியர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com