ஒரு தம்பதியினருக்குக் குழந்தை பிறக்குமா! இல்லையா!! சப்தாம்சம் (D-7) எனும் சக்கரத்தால் அறியலாம்!!!

வேத கால பாரம்பரிய ஜோதிட முறையில், பல்வேறு சக்கரங்களை, நமது ரிஷிகளும், முனிவர்களும்,
ஒரு தம்பதியினருக்குக் குழந்தை பிறக்குமா! இல்லையா!! சப்தாம்சம் (D-7) எனும் சக்கரத்தால் அறியலாம்!!!
Updated on
4 min read

வேத கால பாரம்பரிய ஜோதிட முறையில், பல்வேறு சக்கரங்களை, நமது ரிஷிகளும், முனிவர்களும், ஜோதிடத்திற்குத் தந்து, மானுட வாழ்வின் ஒவ்வொரு பிரச்னைக்கும் சரியான தீர்வு காணும்படியாக கொடுத்துள்ளனர் என்றால், அதைக் கணித்துப் பார்க்கச் செய்யும் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகளே. நாம் முற்பிறவியில் செய்த நற்பயனாலேயே இந்த சக்கரங்களைக் காணவும், பயிலவும், அதனை மானிட வர்க்கத்திற்குப் பயன்படுத்தவும் முடிகிறதென்றால், இவை யாவும் அவரவர் வணங்கும் தெய்வங்களையே சாரும் என்பதில், சந்தேகமே இல்லை எனலாம். 

சக்கரங்களும், அவை மூலம் பெறும் பலன்களும்:- 

D -1
ஜனன கால ஜாதகம்  / ராசி சக்கரம்.
ஜாதகரின் பொதுவான  தகவல்களை பெறலாம்.
D-2
ஹோரா சக்கரம்
ஜாதகர் பெறும் சொத்து , பணம் போன்றவற்றை அறியலாம்
D-3
திரேக்காணம் சக்கரம்
உடன்பிறப்புகள், குறிப்பிட்ட உடலின் பாகத்தில் ஏற்படும் நோய் மற்றும் இறப்பின் நிச்சயம் பற்றி அறிவிக்கும்.
D-4
சதுர்த்தாம்சம்  சக்கரம்
ஜாதகரின் குடியிருப்பு இடம், சொந்தமான சொத்து, மற்றும் பொதுவான அதிர்ஷ்டம்.
D-5
பஞ்சாம்ச சக்கரம்
புகழ் , அதிகாரம், பின்பற்றுபவர்கள்.
D-6
ஷஷ்டாம்சம் சக்கரம்
உடல் நலம் முன் ஜாதகர்,  எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்,
D-7
சப்தாம்ச சக்கரம்
குழந்தைகள், பேரக்குழந்தைகள் பற்றி  எல்லாம் தொடர்புடைய
D-8
அஷ்ட்டாம்ச சக்கரம்
திடீர் மற்றும் எதிர்பாராத , அனுபவங்கள்,  வழக்கு தொடர்புடைய தொல்லைகள்
D-9
நவாம்ச சக்கரம்
திருமணம் பற்றியும் , வரும் கணவர் /   மனைவி பற்றியும், ஒருவரின் சொந்த  தர்மம் போன்றவை மற்றும் அடிப்படை திறமைகள் மற்றும் தனி நபர் வலிமைகள்

மேலே கூறப்பட்டவை ஒரு சிலவே D-60 எனும், ஷஷ்டியாம்ச சக்கரம் வரை உள்ளது. இவைகள் அனைத்தும் ராசி சக்கரம் போன்று தனியாக கண்டு பலன் உரைத்தல் இயலாது. ராசி சக்கரத்தோடு இணைத்துவைத்தே பலன் காணுதல் ஆகிறது. திக் பலம் இவற்றின் மூலம் கண்டே சரியான துல்லிய பலனாக காண முடிகிறது. 

இந்தக் கட்டுரையில் நாம், ஒரு தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான, பேரக் குழந்தைகளுக்கான வாய்ப்பு பற்றியும், அவர்களின் வளம், செழிப்பு போன்றவற்றை துல்லியமாக காண முடியும் சப்தாம்சம் எனும் D-7, சப்தாம்சச் சக்கரத்தைப் பற்றி மட்டுமே விரிவாக காணப்போகிறோம். இந்த சக்கரத்தில், 30 பாகைகள் கொண்ட ஒவ்வொரு ராசியும் 7 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகமும் 4 பாகை 17 கலை 8.57 விகலைகளாக மாறும். ஒரு கிரகம் இருக்கும் இடம், ஒற்றைப்படை ராசியில் இருந்து துவங்கும். அதன் இரட்டை படை அந்த ராசியின் 7-வது இடத்தில் அமையும்.  

சப்தாம்சத்தின் 7 தெய்வங்கள்:-

கசப்பு, பால், தயிர், நெய், கரும்பு, தேன், தூய நீர், சப்தாம்சத்தின் ரசங்கள் இவைகள் முறையே, இந்த வரிசையில் தான் சப்தாம்சத்தின் ஒற்றைப்படை ராசியில் துவங்கும். இரட்டை படை ராசியில் இதன் தலைகீழ் வரிசையாக வரும், அதாவது, தூய நீர், தேன், கரும்பு, நெய், தயிர், பால்,  கசப்பு என்ற வரிசையில் வரும். 

முதல் குழந்தையை 7-க்கு 11-ஆம் வீடான 5-ஆம் வீட்டை கொண்டு அறிய முடியும். களத்திரம்(7), அதன் மூலம் அடையும் லாபம்(11) குழந்தை(5). இது முதல் மனைவி மூலம் பெறும் குழந்தைக்கான விதி, இரண்டாவது மனைவி என்பது 2-ஆம் வீட்டைக் கொண்டு காணலாம். இரண்டாவது மனைவி மூலம் பெறும் முதல் குழந்தையை 2-க்கு 11-ஆம் வீடான 12-ஆம் வீட்டை கொண்டு அறிய முடியும். 

புதன், சனி மற்றும் / அல்லது சுக்கிரன், சப்தாம்ச லக்கினத்தில் இருப்பின் குழந்தை பிறப்பு மறுக்கப்படும் அல்லது பழங்கால பேரின்பம் (PORGENIC BLISS) எனப்படும். கடந்த பிறவியில் எந்த கர்ம வினையையும் கொண்டுவராதவர்கள் / கர்ம வினை இல்லாதவர்கள் ஆவர். புதன், சனி இவை அலி / திருநங்கை கிரகங்கள், இவை D-7 லக்கினத்தில் இருப்பின் குழந்தை பிறப்பு மறுக்கப்படும். இவற்றுடன், சுக்கிரன் D-7 லக்கினத்தில் அல்லது அதன் திரிகோண இடத்தில இணையும் போது, அந்த ஜாதகர், அதிகப்படியான பாலியல் சந்திப்புகளில் மூழ்கியதால் அவருக்கு சந்ததி உருவாவதற்கான வாய்ப்பு குறையும். 

ஒரு ஜாதகத்தில், பெண்களுக்கு 9ஆம் வீடும், ஆண்களுக்கு 5ஆம் வீடும் மட்டும் தான் பிறப்பின் மகத்தான வெற்றியை பறைசாற்றும். 9-ஆம் வீட்டில் சூரியன், ராகு மற்றும் குரு இருப்பின் நிறைய குழந்தை பாக்கியம் உண்டென்பதை கொள்ளலாம். இவைகளே ஆண் வாரிசை அளிக்கும் கிரஹங்கள் ஆகும். குழந்தை தரும் கிரகங்களும், குழந்தை மறுப்பு கிரகங்களும் D-7 லக்கினத்தில் இருப்பின், சிறிது கால தாமதத்திற்குப் பின் குழந்தை பாக்கியம் பெறும் நிலை உண்டென்று காண்க. 

சப்தாம்சம் எனும் D-7ல், 9-ஆம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் இருப்பின்:-

1. இம்மாதிரி அமைப்பு, ஒரு தத்து புத்திரர் தான் சுட்டி காட்டப்படுகிறது.

2. மேலும், இம்மாதிரி அமைப்பு ஒரு ஜாதகருக்கு இருப்பின் அவருக்கு ஒரு விதவைப் பெண்ணையோ அல்லது விவாகரத்து ஆன பெண்ணையோ மணக்க வேண்டிவரும். அந்த பெண்ணிற்கு ஏற்கெனவே நடந்த முதல் திருமணத்தில் பெற்ற ஒரு குழந்தையுள்ளவளாய் இருப்பாள்.

3. மேலும் இவ்வமைப்பு, இந்த ஜாதகரின் மூலம் அல்லாது வேறு ஒரு உறவினர் மூலம் குழந்தை பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதற்கு இவரின் சந்ததி உருவாகும் நிலை பெறாமல் இருப்பதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ அது அவ்வாறு அமையும். D-7 சக்கரத்தில், 9-ஆம் வீடு ஒற்றைப்படை ராசியாகின் பல குழந்தைகளும், இரட்டைப்படை ராசியாகின் சில குழந்தை மட்டும் தான் எனவும் அறியவும். ஆண் ஜாதகத்தில் முதல் குழந்தைக்கு 5-ஆம் வீட்டையும், அதற்கடுத்த குழந்தைகளுக்கு 5ன் 3ஆம் வீடுகளான 7, 9, 11 என தொடரும். இவ்வாறு 3-ஆம் வீடு வரை தொடரும். அதற்கடுத்தது 5-ல் துவங்கியதால் மறுபடி 4-இல் இருந்து துவங்கிடல் வேண்டும். பெண்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் முதல் குழந்தைக்கு 9ஆம் வீட்டையும், அதற்கடுத்த குழந்தைகளுக்கு 9ன் 3ஆம் வீடுகளான 7, 5, 3 என பின்னோக்கி தொடரும். 

சூரியன், ராகு, குரு, செவ்வாய் - ஆண் கிரகங்கள் 

சுக்கிரன், சந்திரன், கேது - பெண் கிரகங்கள் 

சனி, புதன் - அலி அல்லது திருநங்கை கிரகங்கள்

ஆண் ஜாதகருக்கு 5-ஆம் இடமும், பெண் ஜாதகருக்கு 9-ஆம் இடமும் குழந்தைகளை கட்டுப்படுத்தும் வீடுகளாகும். இவற்றிற்கு முறையே வரும் 6- ஆம் வீடும், 10-ஆம் வீடும் விரைய பாவமான, மாறாக வீடாகும். இதன் அதிபதிகள் 5 மற்றும் 9-ஆம் வீட்டுடன் முறையே தொடர்பு கொள்கையில், பிறக்கும் குழந்தைக்கு மாரகம் எனும் அரிஷ்டம் ஏற்படும். அதாவது முறையே 5-க்கு 6-ம், 6-க்கு 7-ம் மற்றும் 9-க்கு 10-ம் போன்ற அமைப்புகளால், பால அரிஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும். 

இவ்வாறு முன்கூட்டியே அறிய பல்வேறு விதிகளை, நிலைகளை நமது ரிஷிகளும், முன்னோர்களும் அளித்தனர் என்றால், இந்த மானிட வர்க்க நலனுக்கே என அறிதல் அவசியம். இந்த கட்டுரையின் நீட்சி கருதியும், ஒரு சில மட்டுமே சாதாரண மக்களும் அறியும் வண்ணம் அளித்துள்ளேன். இவற்றிற்கு அவசரபடாமல் மெதுவாக தகுந்த ஜோதிடரிடம் நாடி பலன் பெறுவது நல்லது. இன்றைய காலகட்டத்தில், அனைவரும் அவசரப்படுவதால், ஜோதிடர்களில் பலர் இதனை கண்டுசொல்ல மறுக்கின்றனர்.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த வகை விதிகளை உணர்வதற்கு அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொட்டுவதோடு, பொறுமையும் கடைபிடித்து, மதித்து பெறும் நிலை உள்ளது. D-7 சப்தாம்சத்தின் வீடுகள் அனைத்தைப் பற்றியும் கூறுவதற்கு ஆசை தான், இருப்பினும் அதில் மிக முக்கியமான 11-ஆம் வீட்டில் அமரும் கிரகத்தினால் விளையும் தீமையும் அதன் பரிகாரமும் சிலவற்றை காணலாம். 

ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7இன் 11-ஆம் வீடு பாவிகளால் கெட்டுப்போய் இருப்பின், அவரின் சந்ததி கிடைக்கும் வாய்ப்பை மற்றவர்களின் பொறாமையால் மறுக்கப்படும். 

ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7இன் 11-ஆம் வீடு ராகுவால் பாதிப்பு அடைந்திருந்தால், அவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் நன்று. கெட்ட கண் திருஷ்டி, பொறாமை போன்றவை அகல காளி மாதாவிற்கு, பூசணிக்காயை பலி தருதல் அவசியம். ஒவ்வொருவரிடமும், உத்தராயணகாலத்தில் ஒருமுறையும், தக்ஷிணாயனக் காலத்தில் ஒரு முறையும் பலி கொடுப்பது அவசியம். 

ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7இன் 11-ஆம் வீடு சூரியனால், பாதிப்பு அடைந்திருந்தால், அவர் குழந்தை ஏதேனும் ஒரு நோய் தாக்கக்கூடும். அதற்கு, சூரிய எந்திரம் அணிவது நல்லது. 

சந்திரன், பாதிப்பு அடைந்திருந்தால், அவர் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பாதிப்படைவர். புதன்,  பாதிப்பு அடைந்திருந்தால், அவர் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகள் பாதிப்படைவர். சுக்கிரன், பாதிப்பு அடைந்திருந்தால், அவரின் மனைவி பாதிப்படைவார். குரு, பாதிப்பு அடைந்திருந்தால், அவரின் பெற்றோர்கள் பாதிப்படைவர். சனி, பாதிப்பு அடைந்திருந்தால், அவரின் வீட்டில் உள்ள வயதானவர்கள், பாதிப்படைவர்.

அனைவரும், சாயியை அடிபணிவோம்,  நலம் யாவும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com