ஆலமரத்திடம் இருக்கிறது ஆயிரம் அற்புதங்கள்! வாருங்கள் தெரிந்துகொள்வோம்!!

ஆல மரம் போல் வேறெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆலமரம் நம்முடைய..
ஆலமரத்திடம் இருக்கிறது ஆயிரம் அற்புதங்கள்! வாருங்கள் தெரிந்துகொள்வோம்!!
Published on
Updated on
2 min read

"ஆல்போல் தழைத்து

அருகு போல்வேரோடி

மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்க"

புதுமணை புகுவிழாக்களில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதைப் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்து!

ஆல மரம் போல் வேறெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆலமரம் நம்முடைய வாழ்க்கை நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும் நாம் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக இருக்கிறது. ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள் ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை "தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம். தழைத்தல் என்றால் பெருகுதல், செழித்து வளருதல் எனப் பொருள். எவ்வளவு மங்கலகரமான வார்த்தைகளை நம் முன்னோர் உபயோகப்படுத்தி இருக்கின்றனர் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆல மரத்தின் பயன்கள் ஒன்றா..இரண்டா!

1. பாலுள்ள மரங்களெல்லாம் சந்திரன் மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்றதாகும். ஆலமரத்தின் விழுதுகள் அந்த மரத்தைப் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கி நிற்கும் ஆற்றலைக் கொண்டது என்றால் அதிலிருந்து கிடைக்கும் மருந்தின் ஆற்றலைப்பற்றிக் கூறவேண்டியதில்லை. ஆலமரத்தின் விழுதுகள் ரத்தத்தைச் சுத்திகரிக்கச்செய்கிறது.

2. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். தளர்ந்த மார்பகங்களை நிமிரச்செய்யும். ஆண்மை குறைபாட்டை நீக்கும். ஆலமரத்தின் விழுதின் நுனிப்பகுதியில் சிவப்பு நிறத்தில் இருப்பதைப் பறித்து அதை அரைத்து மார்பகத்தில் பூசி வந்தால் தளர்ந்த மார்பகம் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடும். 

3. ஆலம் விழுது தொழு நோயைக் குணமாக்கும்.

4. ஆண்மைக் கோளாறுகள், குழந்தை பாக்கியம், ஜலதோஷம், இந்திரியத்தில் உயிரணுக்கள் குறைவாக இருப்பது போன்றவற்றிற்கு ஆலம் இலை மருந்தாகிறது.

5. நீரிழிவு நோய் போக்கி உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். அகத்தியர் தன் குணபாடத்தில் உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும் என்று விளக்குகிறார்.

6. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம் பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

7. சிறந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, சுளுக்கு, ரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், ரத்தக் கட்டுகளையும் நீக்கும். எலும்புகள் வலிமையடையும்.

ஆலமரம் சுக்கிரனின் காரகம் பெற்றதென்றாலும் விழுதுகள் மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும். ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க (திரு மாங்கல்ய சரடு நிலைக்க) சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும். எனவேதான் ஆலமரத்தைக் கேதுவின் ஆதிபத்தியம் நிறைந்த மக நக்ஷத்திரகாரர்கள் வணங்க வேண்டிய விருக்ஷமாக அமைந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com