

திதிகளில் முக்கியமான இரண்டு திதிகளான சூரியனுக்கும் சந்திரனுக்கும் ௦ பாகை மற்றும் 180 பாகையில் உள்ள இடைவெளி தான் அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகும்.
அமாவாசை மற்றும் பெளர்ணமி திதிகளை தவிர மற்ற திதிகளையும் முன்பு உள்ள தொகுப்புகளில் பார்த்தோம். தற்பொழுது முழுமதி திதி மற்றும் மறைமதி திதியை பற்றிய விரிவான விளக்கம் பார்ப்போம். அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சுக்ல பட்சம் எனவும், பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பட்சம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்தர்கள் அவர்களுக்கு ஏற்ப நட்சத்திரம் மற்றும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் ஜீவ சமாதி அடைவார்கள். நம் முன்னோர்கள் வேளாண் பணிகளை திதிகளுக்கு ஏற்ப விவசாய பயிர் செய்தல், நாற்று நடுதல், செடிகளை சீரமைத்தல், களை எடுத்தல் என்று வகைப்படுத்தி செய்வார்கள். அமாவாசை, பெளர்ணமி அன்று பூமியின் ஈர்ப்பு விசை ஏற்ற தாழ்வில் இருக்கும் அதனால் நீரின் ஊற்றும் மாறுபடும் அதனால் அன்றைய நாட்களில் பெரும்பாலும் வேளாண்மை பணிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை மற்றும் தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு செளம்ய தோஷமும் இருக்காது.
பௌர்ணமி
சூரிய மற்றும் சந்திர சக்திகள் நேர் எதிரே இரண்டு ஒளிரும் கிரகம் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வது பௌர்ணமியாக பிரகாசமடைகிறது. அதன் பிரகாச சக்தி நினைத்து பார்த்தலே மெய் சிலிர்க்கும் அன்றைய தினம் முழுமதியாக திகழும். அனைவருக்கும் தெரியும் ராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. வானியல் ரீதியாக சில நட்சத்திரங்கள் சந்திரனோடு சேர்ந்து சில கதிர் வீச்சுகளை பூமியை நோக்கி வீசுகின்றன. பௌர்ணமி தினத்தன்று அந்த கதிர் வீச்சுகள் அதிகமாக இருக்கும்.
இந்துக்களும் மற்ற மதத்தினருக்கும் எல்லா மாதங்களிலும் வரும் பௌர்ணமிக்கு சிறப்பு அம்சம் உண்டு அன்று விரதம் மேற்கொள்வார்கள். சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தியும், சித்ராபௌர்ணமியும் மிகவும் விசேஷம். வைகாசி மாதத்தில் நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, வைகாசி விசாகமும் விசேஷம். ஆனி மாதமன்று சாவித்திரி விரதமும், குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தியும், ஆவணியில் ரக்சா பந்தன், ஓணம். புரட்டாசி மாதமன்று உமா மகேஸ்வர விரதமும், ஐப்பசி அன்று சதாசிவனுக்கு அன்னாபிசேஷம் நடைபெறும். கார்த்திகைப் பௌர்ணமியன்று கார்த்திகை தீபமும், மார்கழியன்று வரும் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரம் கொண்டாடப்படுகிறது. தை பூச நட்சத்திரம் அன்று முருகருக்கும், மாசி கூடிய மகம் நட்சத்திரம் அன்று கடலாடும் விழா நடைபெறும் மற்றும் பங்குனி உத்திர நாளுக்கு பல சிறப்புகள் கொண்டது. புதனுக்கு உரிய கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தில் சந்திரன் அமைந்திருக்கும் நாளே பங்குனிமாத பௌர்ணமி தினம். அன்று வட மக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவார்கள்.
கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்
குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்
நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்
நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்
அன்றேல் களங்கமது யுற்றோனாகும்
உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்
பிறவே மந்திரத்தால் பலரைத்தானும்
மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே !
- அகத்தியர்
பெளர்ணமி பிறந்தவர்கள் நல்ல குணாளன், புத்திசாலி, பொறுமையானவன், வார்த்தை தவறாத சத்யவான், நேர்மையானவன், தயாள சிந்தனை உடையோன் என்றும் இந்த குணநலன் இல்லாதவன் எதிர்மரையாக செயல்படுபவன் மந்திரத்தால் பலரை கெடுப்பவனாவான் என்று அகத்தியர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பௌர்ணமியில் கடவுள் வழிபாடு செய்யலாம், யாகம் வளத்தல், அம்மன் சுலோகம் சொல்லுதல், சிற்ப அம்பிகை வழிபாடு, மங்களகரமான காரியம், விருத்தி தரும், மருந்துண்ணல், திருமண நிச்சயம், விரதம் இருத்தல், சிலை பிரதிஷ்டை போன்றதை செய்யலாம். பௌர்ணமி நாட்களில் அபிராமி அந்தாதி படித்தால் வீட்டில் தீய சக்தி அகற்றி நல்ல சக்தியை பெறுவோம்.
அதிதேவதை மற்றும் வணங்கும் தெய்வங்கள்: பராசக்தி, லலிதாம்பிகை, அபிராமி.
பௌர்ணமிக்கான கிரகம் ராகுவாகும்.
அமாவாசை
அமாவாசை அன்று சூரியனும் சந்திரனை மறைக்கும் நாள் அதனால் பூமியில் இருந்து சந்திரனைப் பார்க்கமுடியாது. அன்று இருள் பொருந்தி இருப்பதால் நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மற்றும் திதி கொடுக்க உகந்த நாளாகும். மேலும் ஆத்மகாரகன் ஒளி கதிர்கள் அதிமாக இருக்கும். அமாவசை திதியை குருட்டு திதி மற்றும் இருட்டு திதி என்கிறது ஜோதிட நூல்கள். அமாவாசையில் பிறந்தவர்களுக்கு பில்லி சூன்யம், மாந்த்ரீகம் என எதுவும் செய்யமுடியாது.
அமாவாசையில் பிறந்தவர்கள் தீர்க்க ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை கொண்டவர்கள், முன்னோர்களின் ஆசிகளை பெற்றவர்கள். கூர்மையான அறிவு, கொஞ்சம் திருட்டுத்தனம் முக்கியமாக மனதைத் திருடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள், சுயநலவாதிகள், முடிவு எடுத்தால் எடுத்ததுதான், தன்னோடு இருப்பவர்களை மேலே தூக்கிவிடமாட்டார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது.
மன நோயாளியாக இருக்கும் நபருக்கு அமாவசை பௌர்ணமிக்கு தான் அவர்கள் செயல் மாறுபடுகிறது அதனால் கிட்னி பாதிப்பும் இருக்கும் என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்படுகிறது. சித்தர்கள் இந்த மாதிரி பாதிப்பு இருப்பவர்கள் அமாவாசைக்கு பூசணியை படையலில் சேர்த்து உன்ன சொல்வார்கள் அல்லது ஜோதிட ரீதியாக தானம் செய்ய சொல்லவர்கள்.
பூசணிக்காய் ஒரு தோஷ நிவர்த்தி என்று பெரியவா கூறியது அனைவருக்கும் தெரிந்ததே. அவற்றை பற்றி ஒரு கட்டுரையில் பார்ப்போம். அமாவாசை காலங்களில் பூசணிக்காய் தானமாக கொடுப்பார்கள் சிலர் அவற்றை பெற மறுப்பதால்; அதற்கு பதிலாக பூமாதேவிக்கு காணிக்கையாக அமாவாசை நாட்களில் குங்குமத்தை தடவி வீட்டின் மற்றும் கடையின் முன்பாக பூசணிக்காயை உடைகிறோம் அதனால் நம் துஷ்ட சக்திகள் மற்றும் கஷ்டங்களையும் அகற்றுவதாக கருதப்படுகிறது.
அமாவாசை அதிதேவதை மற்றும் வழிபாடு: சிவன் மற்றும் காளி, பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, தானம் காரியங்களை செய்தல்.
வணங்கும் தெய்வங்கள் : குலதெய்வம்
அமாவாசைக்கான கிரகம் சனி ஆகும்.
- ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜோதிட நிலையம்
ஜோதிட சிரோன்மணி தேவி,
whats App: 8939115647
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.