அனந்தசரஸ் குளத்திலிருந்து எழுந்தருளினார் அபூர்வ அத்திவரதர்! காஞ்சி செல்ல தயாராகுங்கள்!!

40 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ அத்தி வரதர் சிலை நேற்றிரவு அனந்த சரஸ் திருக்குளத்திலிருந்து
அனந்தசரஸ் குளத்திலிருந்து எழுந்தருளினார் அபூர்வ அத்திவரதர்! காஞ்சி செல்ல தயாராகுங்கள்!!
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ அத்தி வரதர் சிலை நேற்றிரவு அனந்த சரஸ் திருக்குளத்திலிருந்து பக்தர்கள் கோஷங்கள் முழங்க ஆரவாரத்துடன் வெளியே எடுக்கப்பட்டார். 

தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்புக் கொண்ட ஆன்மிகத் தலமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்கான வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு இந்தாண்டு கிடைத்துள்ளது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினர் தீவிர முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் வீற்றிருந்த அத்தி வரதரை வெளியே கொண்டு வரும் பணிகளைத் தனியார் பெருநிறுவனம் கடந்த ஒருமாதமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இக்குளத்திலிருந்த நீர், மீன்கள் கிழக்கு கோபுரம் அருகே உள்ள பொற்றாமரைக்குளத்துக்கு மாற்றப்பட்டது. பின்பு, அனந்த சரஸ் திருக்குளத்திலிருந்து சகதி அகற்றும் பணி நடைபெற்றது. 

நிறைவாக, அத்தி வரதர் வீற்றிருக்கும் 4 கால் மண்டபத்துக்குக் கீழ் உள்ள பகுதியில் நீர் வெளியேற்றும் பணி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கியது. அப்போது, கோயில் கைங்கர்யர்கள், பட்டாச்சரியர்கள், மணியக்காரர் உள்ளிட்ட பெருமாளுக்கு சேவையாற்றி வரும் நெருக்கமானவர்கள் அனைவரும் இருந்தனர். திருக்குளம் வளாகத்தில் அறநிலையத்துறையினரும், பாதுகாப்புக்கு போலீஸாரும் இருந்தனர். வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

ஆதி அத்தி வரதர் எதற்காக குளத்தில் வைக்கப்பட்டுள்ளார்.. தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்ந்து, அத்தி வரதரை எடுக்கும் பணி நடைபெற்றது. முதலில் நீரை வெளியேற்றி, பின்பு சகதி அகற்றப்பட்டது. இதையடுத்து, சுமார் 2 மணியளவில் குளத்தினுள் வீற்றிருந்து அத்திவரதரின் பொற்பாதத்தை அடைந்து, 2.30 மணிக்கு திருமுகம் கண்டு, 3.10 மணிக்கு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு, குளத்தில் பாதை அமைக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தின் வழியாக சென்று வசந்த மண்டபத்தை அடைந்தார். அப்போது, அத்திவரதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, தைல காப்பு ஆஸ்தான சடங்குகள், பூஜைகள் நடத்தப்பட்டு சரியாக ஜூலை 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கவுள்ளார் ஆதி அத்திவரதர்.

இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

- கோபி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com