இன்றுடன் நிறைவடைகிறது கும்பமேளா: ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்ப்பு!

உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா சிவராத்திரி திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது.
இன்றுடன் நிறைவடைகிறது கும்பமேளா: ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்ப்பு!

உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த கும்பமேளா மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவடைகின்றது. இதையடுத்து திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பக்தர்கள் இன்று புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அலாகாபாதில் கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 

கும்பமேளாவில் இதுவரை 22 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர். இந்நிலையில், மகாசிவராத்திரியான இன்று புனித நீராடலும், கும்பமேளாவும் நிறைவு பெறுகிறது. இந்நாளில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி 20,000 காவலர்கள், ஊர்க் காவல் படையினர் 6,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 40 தீயணைப்பு நிலையங்களும், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 80 குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com