
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் பங்குனி உத்தரப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை 6.40 முதல் காலை 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து 13-ம் தேதி அதிகார நந்திக் காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து 14-ல் வெள்விடை பெருவிழா காட்சி நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 17-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 6 மணிக்கு கபாலீசுவரர் தேரில் எழுந்தருள்கிறார். ஐந்திருமேனிகள் விழாவும் அதே நாளில் நடைபெறவுள்ளது.
20-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும். இதையடுத்து மார்ச் 22-ல் விடையாற்றி உற்சவம் நடைபெறும் என கபாலீசுவரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.