கடவுளை ஏன், எப்பொழுது தேடுகிறோம்?

நாம் செய்யும் அனைத்து காரியமும் நம்மால் செய்யமுடியும் என்று நினைக்கிறோம். ஆனால் சில..
கடவுளை ஏன், எப்பொழுது தேடுகிறோம்?

நாம் செய்யும் அனைத்து காரியமும் நம்மால் செய்யமுடியும் என்று நினைக்கிறோம். ஆனால் சில சமயம் அந்த செயலில் வெற்றி காணமுடியவில்லை. அதற்கும் மேல் ஒரு  சக்தி இருப்பது உணரமுடிகிறது. அப்பொழுதுதான் கடவுளைத் தேடுகிறோம். 

நமக்கு எந்த கிரகம் அல்லது எந்த கடவுள் நமக்கு உதவுவார் என்று தெரிந்துகொள்ள சரியான ஜோதிடரை அணுகவேண்டும். அப்பொழுதுதான் அவர் வலிமை குன்றிய  கிரகதோஷ நிவர்த்திகளைக் கூறுவார். அந்தநேரம் நம்மிடம் பணம் இல்லாத சமயத்தில் கடன் வாங்கி பரிகாரம் செய்ய வேண்டாம். அதற்கு பதில் நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்யலாம். அதிக பரிகார செலவு கடனாக மாற வாய்ப்புள்ளது. உங்களிடம் என்ன உள்ளது என்று அந்த ஆண்டவனுக்கே தெரியும்.

ஜாதகர் ஜோதிடரை அணுகிய பிறகு அந்தந்த கிரக கடவுளைப் பற்றி அறிந்து அவர் கோவிலுக்குச் சென்று அழுது மன்றாடி வணங்கவும். உங்களால் முடிந்த காணிக்கையைச்  செலுத்தலாம். ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையை உயர்த்த கடவுளின் பாதம் பற்றுவோம்।

நம்மால் என்ன இயலுமோ அதை நாம் கடவுளுக்கு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஜாதகத்தில் எந்த கிரகம் நமக்கு உதவமுடியாத நிலையில் உள்ளதோ, அதன் சதவீதம் குறைவாக உள்ளதோ அதன் செயல் தன்மையை ஊக்குவித்து உயர்த்த வேண்டும். எப்படி என்று கீழே விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

கர்மாவை அழிக்கப் பரிகாரம் இல்லை. கர்மா என்ற கட்டுப்பாட்டிலிருந்து எந்த நேரமும் நாம் விடுபட முடியாது. எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தே தீர வேண்டும். இது தான் விதி. இதற்கு எந்தவித பரிகாரமும் கிடையாது. ஆனால் ஜாதகருக்கு உதவும் கிரகங்களின் வீரியத்தை உயர்த்தினால் பாதிப்பு குறையலாம். "தலையில் விழுவது கருங்கல் அல்லது செங்கல்" என்று அமையும்.

நாம் இருவகை தேவைகளுக்கு கடவுளைத் தேடுகிறோம். அவை, 1. அடிப்படைத் தேவைகள் 2. ஆடம்பர வாழ்க்கை தேவைகள்

அடிப்படை தேவைகள்: நமக்கு ஏற்படும் முக்கிய தேவைகள் என்றால், பசி, பட்டினி, வேலையில்லாமை, காரியத்தடை, திருமணத்தடை, செல்வம் இல்லாமை,  புத்திர பாக்கியம், குழந்தைகள் படிப்பு, குடும்ப ஒற்றுமையின்மை, தீராநோய், சுப நிகழ்ச்சிகள் நடைபெற, இருக்க ஒரு வீடு, குடும்பத்தில் திடீர் மரணம், பலவித  பிரச்னைகள் நம்மைத் துரத்தும் போது கடவுளைத் தேடுகிறோம். 

ஆடம்பர வாழ்க்கை தேவைகள்: அபரிமிதமான பொன் பொருள் ஈட்ட, புகழ் அடைய, அரசியலில் உயர, வீடு மனைகளை அதிகப்படுத்த, ஆடம்பரமான வாழ்க்கை வாழ, ஆசை நிவர்த்தியடைய கடவுளைத் தேடுகிறோம். 

ஒன்பது கிரகங்களும் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தில் அடங்கும். கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் இந்த எளிமையான மந்திரத்தைத் தினமும் ஜபித்து வரலாம். 

"சிவாய நம ஓம்

சிவாய வசி ஓம் 

சிவ சிவ சிவ ஓம் "

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com