மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்!

கிரஹம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. 
மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்!
Published on
Updated on
1 min read

கிரஹம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. 

இரும்பு துகள்களை காந்தம் எப்படி தன்னிடம் இழுக்கின்றதோ, அவ்வாறே நவக்கிரகங்களும் தங்களுக்கே உரிதான இழுக்கின்ற சக்தியின் வாயிலாக வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய சுக துக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மனிதனின் மனநிலையை அதற்கு ஏற்றவாறு செயல்புரியச் செய்கின்றன.

கிரகங்கள் என்பவை யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல் எனப் பரம்பொருள் இருக்க, நவக்கிரகங்களுக்கு அவசியம் என்ன? 

மனித சரீரம் என்ற தேசத்திற்கு சகலோக நாயகரான பரம்பொருளே தலைவர் எனினும், அந்தச் சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அவர் அதிகாரியாக நியமித்து இருக்கிறார்.

அவ்வாறு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மங்களில் செய்த வினையை அனுசரித்து அதற்குத் தகுந்த பலன்களைத் தத்தம் தசாபுத்திகள் நடக்கும்போது கொடுத்து வருகின்றன.

சூரியன் - தந்தை (ஆத்மா, எலும்பு)

சந்திரன் - தாய் (மனம், இரத்தம்)

செவ்வாய் மற்றும் ராகு - சகோதரர்கள் (பலம், மஜ்ஜை)

புதன் - தாய்மாமன் (வாக்கு, தோல்)

குரு - புத்திரக்காரன் (ஞானம், தசை, மாமிசம்)

சுக்கிரன் - களத்திரக்காரகன் (காமம், இந்திரியம்)

சனி, கேது - ஆயுள் (துக்கம், நரம்புத் தசை)

ஒரு மனிதன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா, அவன் எலும்பு பலம் உள்ளதா, தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் எப்படி என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் அவனுடைய சூரியன் இருக்கும் நிலையை அறிந்து சொல்ல முடியும். அதாவது கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடிகொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும்.

நமது உடலோடு தொடர்புகொண்டு உள்ள கிரகங்களைத் திருப்தி செய்யவும், உடலில் அந்தந்த பாகங்களை வலிமைப்படுத்தவும், அந்தந்த கிரகங்களுக்குரிய தானியங்களான நெல், துவரை, எள் போன்றவற்றை உபயோகித்து வருகிறோம். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனிக்கிரஹத்தைத் திருப்தி செய்யும் முறையாக நல்லெண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் மூலம் நீண்ட ஆயுளை அடைய சனி நீராடு என்பது பெரியவர்களின் வாக்கு ஆகும்.

இந்த செயல்கள் அனைத்தையும் நன்கு கண்டுணர்ந்தால் உடை, உணவு, செயல், சேவைகள் போன்ற எல்லாவற்றையும் நம்மை அறியாமலே கிரகங்களின் பிரிதிக்காக நாம் செய்து வருகிறோம். இவ்வாறாகக் கிரகங்கள் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் ஒன்றி செயல்படுகின்றன என்பது கண்கூடாகும்.

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com