

பெற்றோர்களுக்கான சிறப்புப் பகுதி
தாய் தந்தையருக்குக் குழந்தை நன்றாகப் படித்து பெரிய இடத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் படிக்க வைக்கிறார்கள். பெற்றோரின் முக்கிய குழப்பம் குழந்தைகளை எந்த படிப்பு படிக்க வைக்கலாம் என்று கேள்விக் கணைகளுடன் எங்களிடம் வருகின்றனர். நாங்கள் அது கணித்துக் கூறினாலும் அந்த படிப்பு துறை விட்டுப் பெற்றோருக்கு எது முதன்மை படிப்பு என்று நினைக்கிறார்களோ அதையே படிக்க வைக்கிறார்கள். தாயானவள் குழந்தையின் திறமை மற்றும் புத்திக்கூர்மை கொண்டு சரியான பாதை நியமிக்கலாம். முதலில் நாம் ஒவ்வொரு குழந்தைகளும் மனப்பாடம் செய்யும் திறமை மாறுபடும், சில குழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வமும் படிப்பில் குறைந்த ஆர்வமும் இருக்கும் இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாம்.
கல்விக்கான பாவங்கள்
நான்காவது பாவகத்தின் மூலம் வித்தை, கல்வி, வாகனம், வீடு, சுபம் மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அறியலாம். பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென எழுதலாம்.
பத்தாம் பாவம் - படிப்பு பாவத்தின் அடித்தளம் (foundation)
சீர் மிகுந்தவனே, நீ இன்னுமொரு சேதியினையும் கேட்பாயக! நிதியை குறிப்பிடும் இரண்டிற்குடையவனும், ஜீவனஸ்தானாதியும் பத்துக்குடையவனும் கூடினாலும், பார்த்தாலும், பரிவர்த்தனை அடைந்தாலும் அந்த ஜாதகருக்கு பொன், பொருள், நிலம், குபேர சம்பத்து கிட்டும் என்பதாகும்.
படிப்பையும் தொழிலையும் உயர்த்தும் காரக கிரகங்கள்
ஒவ்வொரு கிரகங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்பொழுது தொழிலின் செயல்பாடு மாறுபடும். இது தவிர அவர்கள் வெளிநாட்டுக்குப் போவது, அரசாங்கம் மற்றும் தனியார் துறையில் வேலை செய்வது பற்றிய விவரங்கள் தனியாகக் கட்டுரையில் சொல்லப்படும்.
திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தாமதம்
படிப்புக்கு ஏற்ற தொழில் அமையாததால் சிலர் வேலை செய்துகொண்டே வெவ்வேறு படிப்புகள் அவர்கள் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப படித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்று 35 வயதுக்கு மேல் வயதாகிச் செயல்படுகின்றனர். ஜாதகர் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள்.
பெற்றோருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தொழிலுக்கு ஏற்ப படிப்பை நியமித்துக் கொள்ளுங்கள். இதில் நிறைய விரயங்கள் வீணாகாது. இன்றைய காலகட்டத்துக்கு அனுபவ படிப்பு அதிகம் தேவைப்படுகிறது.
- ஜோதிட சிரோன்மணி தேவி
சென்னை. தொலைபேசி : 8939115647
மின் அஞ்சல் : vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.