பஞ்சபூதத்தில் அடக்கிய இந்த பிரபஞ்சமும் நம் சாஸ்திர வழிமுறைகளும்!

இந்த உலகம் பஞ்சபூதங்களை அடங்கியுள்ளது நீர், காற்று, நெருப்பு ஆகாயம், நிலம் கொண்டது.
பஞ்சபூதத்தில் அடக்கிய இந்த பிரபஞ்சமும் நம் சாஸ்திர வழிமுறைகளும்!
Updated on
3 min read

 
நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு 
ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
                                                   - என்கிறது தொல்காப்பியம்.

இந்த உலகம் பஞ்சபூதங்களை அடங்கியுள்ளது நீர், காற்று, நெருப்பு ஆகாயம், நிலம் கொண்டது. ஐந்து என்பதுதான் ஒருவித உலக சூட்சமம். நம் உடலின் உள்ள எலும்பு,  சதை, ரத்த ஓட்டம், நரம்பு, செயல்பாட்டுக்கு பஞ்சபூத தத்துவம் உள்ளே வேலை செய்தால்தான் அனைத்து உடல் மூலக்கூறுகளும் சீராக வேலை செய்யும். பஞ்சபூத  அடிப்படை தத்துவங்களே மனித உடலில் மட்டும் அல்லாது தாவரங்கள், விலங்குகள் மற்றும் அனைத்து பிரபஞ்ச சக்திக்கும் தேவைப்படும் ஒரு மூலக்கூறு இந்த  பஞ்சபூதங்கள். இந்த பஞ்ச பூதங்களின் விகிதாசாரம் குறையத் துவங்கினால் பஞ்சம் என்ற நோய் உலகைத் தாக்கும். நம் பஞ்சபூதங்களை ஆட்டிப்படைக்கும் அரசன், ராஜாதி  ராஜன், நம் ஈஸ்வரன். 

பஞ்சபூதங்களின் அரசன் 

பஞ்சப் பிரம்மமான சதாசிவத்துக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. இந்த ஐந்து முகங்களும் (சத்யோஜாத முகம், வாமதேவ முகம், அகோர முகம், தத்புருஷ முகம், ஈசான  முகம்) ஒவ்வொன்றிலிருந்து ஐந்து மூர்த்தங்களாய் உருவெடுத்து மொத்தம் 25 முகங்களுடன் மகா சதாசிவ மூர்த்தி திகழ்கிறார். இந்த பிரபஞ்சத்தை ஐந்து தொழிலாகத்  திசைக்கு ஒன்றாகச் செய்துவருகிறார். அவை ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் என்று அடக்கி ஆட்சிபுரிகிறார் நம் நமச்சிவாயர். இவரே பஞ்ச பூதங்களின்  வடிவமாகத் திகழ்பவருமான பெருமான். இன்னும் விளக்கமாக வரைபடம் மூலம் காணலாம். இவரே ஐந்து முகங்களுடன் செயல்படுகிறார். இந்த வரைபடம் மூலம்  தெளிவுபடுத்தும்.

பஞ்சாட்சரம் மந்திரம் 

ஓம் என்ற பிரணவ மந்திரம் பஞ்சபூதங்களில் அடங்கியுள்ளது. பல சிவ மந்திரங்கள் இக்கால கட்டத்தில் நம்மால் சொல்ல இயலாது. விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து  இவை மூன்றும் சிவபெருமானாரை குறிக்கும் கருவிகளாகும். இருந்தாலும் நம் சைவ சமயத்தின் மூல மந்திரம் கூறிக்கொண்டு இருக்கலாம். "நமசிவாய" எனும்  திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

திருவைந்தெழுத்தினை 5ஐந்து வடிவங்களாகக் கொள்கின்றனர். அவை கீழே।

தூல பஞ்சாட்சரம் – நமசிவய

சூட்சும பஞ்சாட்சரம் – சிவயநம

ஆதி பஞ்சாட்சரம்- சிவயசிவ

காரண பஞ்சாட்சரம் – சிவசிவ

ஏக பஞ்சாட்சரம் - சி

இந்த பஞ்சாட்சரம் எழுத்தை பிரிக்கும் பொழுது = பஞ்ச + அட்சரம் (சமஸ்கரதம்), இதன் பொருள் ஐந்து "நமசிவாய" என்பதாகும். ஐந்தெழுத்து திருவைந்தெழுத்து  மந்திரத்தில் சூட்சமம்  “ந”கரம் – நீலம் தத்துவத்தையும் (நிலம்);  "ம"கரம் – நீர் தத்துவத்தையும்; "சி"கரம்- நெருப்பு தத்துவத்தையும்; "வ"கரம் - வாயு தத்துவம்; "ய"கரம்-  ஆகாய தத்துவத்தையும் குறிக்கும். நாம் ஆயுள் முடியும் வரை இந்த மூல மந்திரத்தை ஜெபிப்போம்.

ஜோதிடத்தில் சூட்சமம் பஞ்சபூத தத்துவம்

பஞ்சாங்கம்: பஞ்சாங்கம் ஜோதிடர்களின் முக்கியமான ஒரு வானியல் நூல். பஞ்சபூதங்களுக்குள் அடங்கிய பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் கொண்டது. இதற்கும் தனித்தனி அதிபதிகளும் பஞ்சபூதங்களும் பிரிக்கப்பட்டுள்ளது. யார் என்று கேட்கிறீர்களா அவை திதிக்கு சுக்கிரனும் (நீர்), வாரத்துக்கு செவ்வாயும் (நெருப்பு), யோகத்துக்கு குருவும் (ஆகாயம்), கரணத்திற்கு புதனும்(நிலம்), நட்சத்திரத்துக்கு சனியும் (காற்று) அதிபதிகள் ஆகும். பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக்கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். பஞ்சாங்கம் என்ற பஞ்சபூத ஆசீர்வாதம் கொண்டுதான் ஜோதிடர்கள் முஹூர்த்தம் குறித்து திருமணம் முடித்துவைக்கபடுகின்றனர்.

பஞ்சபூத தத்துவமும் ஜோதிடமும்

பன்னிரண்டு பாவங்கங்களை இயக்க வேண்டுமானால் அதில் பஞ்சபூத தத்துவங்கள் அடங்கி இருக்க வேண்டும். ஜாதக கட்டத்தில் ஆகாயம் என்ற தத்துவம் இடம் பெறாது ஏனென்றால் அனைத்து ராசி மண்டலமும் ஆகாயம் என்ற போர்வைக்குள் மற்ற நான்கும் அடங்கும் அவை நெருப்பு, பூமி, காற்று மற்றும் நீர். பஞ்சபூதம் என நான்கு தன்மைகள் மட்டுமே ஒரு ஜாதகன் குணம், உடல் கூறுகள், குலதெய்வம் காணல், ஜாதகரின் மனைவி குணம், தொழில், என்று அடுக்கிக் கொண்டு போகலாம். இவை அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தில் அடங்கும். ஜாதக கட்டத்தில் நான்கு விதமான தன்மைகள் ராசியில் மூன்று முறை வருவதால் பன்னிரு ராசிகளுக்கும் சமமாகிறது.

பஞ்சபூத தத்துவத்தில் குஜாதி ஐவர்கள்

நவக்கிரகங்களை மூன்றாகப் பிரித்துள்ளன.. 1) ஒளி கிரகம் என்று கூறும் சூரியன், சந்திரன் நேரிடையாக பூமியில் ஒளியைக் கொடுக்கும்,

2) சூரியன் ஒளியின் பிரதிபலிப்பாய் குஜாஜி ஐவர் எனப்படும் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி கிரகங்கள் செயல்படுவார்கள், 

3) ஒளியை இழந்த கிரங்களான சாயக் கிரகங்கள் ராகு கேது ஆகும். இதில் குஜாதி ஐவர்கள் தான் பஞ்சபூத கிரகங்களின் தத்துவத்திற்கு உரியவர்கள் எப்படி செவ்வாய் நெருப்பு தத்துவத்தையும்; குருவானவர் ஆகாய தத்துவத்தையும்; சுக்ரன் ஆனவர் நீர் தத்துவத்தையும், புதன் ஆனவர் பூமி தத்துவத்தையும்; சனியானவர் காற்று தத்துவத்தையும் உள்ளடங்கி வேலை செய்வார். 

பஞ்சபட்சி சாஸ்திரம்

நவக்கிரகம் துணை கொண்டும் மற்றும் பஞ்சபூத தத்துவம் உள்ளடக்கியும் பஞ்சபட்சி சாஸ்திரம் பயன்படுத்துகிறோம். இந்த சாஸ்திரத்தைச் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சாஸ்திரத்தைக் குருக்களின் மூலம் விசுவாசமுள்ள சீடனுக்குக் கற்றுக்கொண்டனர். நாம் பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகள் உண்டு. ஆய கலைகள் எனப் போற்றப்படும் 64 கலைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கலையை அறிந்தோர் எதிரிகளை வெல்வர் என்பது நம்பிக்கையாகும். இதனால் கத்திக்கட்டு சேவல் சண்டை, கிடா சண்டை, சிலம்பம் போன்ற விளையாட்டுகளினை விளையாடுவதற்குக் காலம் மற்றும் வெற்றி வாய்ப்பினை கணிக்க இந்த பட்சி சாஸ்திரத்தினை கற்கின்றனர். இந்த சாஸ்திரத்தைப் பயன்படுத்துவது என்பது மிகவும் ஜாக்கிரதையாகப் பயன்படுத்த வேண்டும். பஞ்ச பட்சி சாத்திரத்தினைக் கொண்டு ஐந்து பறவைகளின் (வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்) குணநலன்களை மனிதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உள்ளது. 

இந்த பஞ்ச பட்சிகளுக்குள் அனைத்து ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடங்கும். இவற்றைக் கொண்டு ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்சபூதம் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்.  பஞ்சபட்சி தெரிந்தவனைப் பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான். இன்றும் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இந்த அபூர்வ சாஸ்திரங்களை ஞானிகள், முனிவர்கள், சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாகப் பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

ஐந்து என்பதற்கு இவ்வளவு அதிர்வு சக்தியா பிரமிக்க வைக்கிறது நமச்சிவாயா. பஞ்சபூத தன்மையை மற்ற தலைப்புடன் அடுத்த வாரம் பார்ப்போம். 

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com