சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் எப்போது?

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம், வருகிற செப்டம்பர்..
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் எப்போது?
Published on
Updated on
1 min read

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம், வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.31 மணிக்கு, சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. 

இதுகுறித்து ஹிந்து தர்மார்த்த ஸமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, தமிழ்நாட்டு பக்தர்களின் சார்பில், ஹிந்து தர்மார்த்த சமிதி 11 வெண்பட்டுக் குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் சனிக்கிழமை (செப்.28) காலை 10.31 மணிக்கு, பூக்கடை சென்ன கேசவ கோயிலில் இருந்து தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. 

பின்னர் நடராஜா திரையரங்கம், கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் சென்றடைந்து இரவு தங்குகிறது. செப்டம்பர் 29 ஆம் தேதி,  ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது. 

இவ்வழியே அக்டோபர் 3-ஆம் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. நிகழ்வினை, விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வரூபானந்தேந்ரா சரஸ்வதி மகா சுவாமி மற்றும் விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வத்மனந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி,தொடங்கி வைக்கின்றனர். 

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் எஸ். வேதாந்தம் சிறப்புரையாற்றுகிறார். விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுசெயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி வரவேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com