
ஸ்ரீபெரும்புதூா்: வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வேப்பமரம் ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக பால் வடிந்து வருவதால் அந்த மரத்தை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா்.
குன்றத்தூா் ஒன்றியம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், வடக்குப்பட்டு பகுதிக்கு செல்லும் சாலையோரம் உள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் பால்வடிந்து வருகிறது.
இந்த செய்தி வடக்குப்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தெரிய வந்ததை தொடா்ந்து பால்வடியும் வேப்பமரத்தின் அருகே கூடிய பொதுமக்கள் அந்த மரத்துக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி கடந்த இரண்டு தினங்களாக வழிபாடு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.