வேத ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் என்பது தகப்பனையும், ஐந்தாம் பாவம் என்பது குழந்தையையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவே கிரகமாக சொல்லும்பொழுது தந்தை என்பது சூரியனையும் புத்திரன் என்பது குரு என்பதாகவும். மரணம் என்றவுடன் பிறந்த குழந்தையால் தோஷம் அல்லது குழந்தை பெற்றோரை முழுங்கி விட்டது என்றெல்லாம் கூறுவர் அது சரியானதல்ல!
குழந்தை எப்பொழுது பிறக்குமோ அது கடவுள் கிருபை. தந்தை மறைவுக்கு அவரின் கர்மா பதிவால் ஆயுள்தான் அவரவர் விதி ஆகும். இங்கு யாரையும் பழிக்கக்கூடாது. தந்தையின் மரணம் என்பது குழந்தையின் ஜாதகத்தின் மூலம் எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம். ஜோதிடர்கள் ஆயுள் பற்றிச் சொல்லமாட்டார்கள். இதுவும் ஒரு சில காரணங்களுக்காக சொல்லப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி அறிந்துகொள்ளலாம். நாம் இன்று பார்ப்பது தந்தைக்கு ஆபத்து பற்றிய ஒரு விரிவைப் பார்ப்போம்.
என்பார் சன்மம் தனில்காரி
இரவி சசிமூ வரும்இருக்கத்
தன்பார் ஐந்தில் குசன்இருக்கத்
தந்தைக்கு அரிட்டம் தான் ! பின்னும்
அன்பார் குசன்செம் பாம்பிரவி
யாக மூவர் உடன்கூடப்
பின்பா ராமல் மூன்றாண்டில்
பிதாவுக்கு அரிட்டம் பேசுவரே! (ஜாதக அலங்காரம்)
இவ்வாறெல்லாம் இருந்தால் ஆபத்து நடந்துவிடும் என்று அர்த்தம் ஆகாது. ஜோதிடத்தில் மாணவர்கள் இன்னும் நுணுக்கமாக ஆராயவேண்டும். தந்தையின் விதி என்பது அவரின் தசா புத்தி கோட்சாரம் என்னும் நுணுக்கம் பதில் சொல்லும்.
தந்தையின் ஆபத்து பற்றி இதில் கூறப்பட்ட அனைத்தும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டது என்றாலும் அதில் ஒரு சில சூட்சம விதியும் உள்ளது. கர்ம காரகனோடு எந்த கிரகம் பின்னி இருக்கிறதோ அவற்றை பின் தொடர்கிறது நம் பிறவி கர்மா. அவை அனைத்தும் எம்பெருமான் அறிவான். ஓம் நமச்சிவாய!
குருவே சரணம்!
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.