
ஏழுமலையானை மந்திராலய ராகவேந்திர மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டார்.
கர்நாடகா மாநிலம் மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர மடத்தின் பீடாதிபதியான அவர் தன் சீடர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலைக்கு வந்தார். இங்குள்ள அன்னதானக் கூடத்தை அடுத்த அரச மரத்தடியில் அவருக்கு கோயில் மரியாதை அளித்து தேவஸ்தான அதிகாரிகள், சுவாமி தரிசனத்துக்கு அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ஏழுமலையான் தீர்த்தம், லட்டு பிரசாதங்கள், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.