திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 20-ஆம் தேதி வரை விழா
திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய சித்திரை பிரம்மோற்சவம்.
திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய சித்திரை பிரம்மோற்சவம்.


திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 20-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. 

திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முருகன் கோயிலில் புதன்கிழமை காலை ஆறû ர மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது.

அப்போது உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.  இரவு 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் கேடவாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வரும் 16-ஆம் தேதி தேர்த் திருவிழாவும் 17-ஆம் தேதி தெய்வானை திருக்கல்யாணமும், 19-ஆம் தேதி தீர்த்தவாரியும் 20-ஆம் தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது. 

இதுதவிர பிரம்மோற்சவம் நடக்கும் வரை தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். பிரம்மோற்சவம் நடக்கும் 11 நாள்களிலும் இரவு நேரத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மலைக்கோயில் வளாகத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com