
அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் முத்தாலம்மன், பொன்னியம்மன்.
ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு முத்தாலம்மன், பொன்னியம்மன் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஊஞ்சல் சேவை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...