சுடச்சுட

  
  RAGU_KETHU_SWAMY100407

   

  வாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி எப்போது? பொது பரிகாரம் என்ன? பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் எவை? பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள் எவை என்று பார்க்கலாம். 

  நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் மாசி மாதம் 1ம் தேதி, ஆங்கில மாதப்படி 13.02.2019 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

  யார் அந்த ராகு கேது? வாங்க பார்க்கலாம்..

  ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. ராகும் கேதுவும் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். 

  ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம் - களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

  இந்தாண்டு ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்

  மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம் 

  ராகு கேது பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்

  ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம் 

  சரி, பொது பரிகாரமாக என்ன செய்யலாம்? 

  ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

  ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு வினாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மையை தரும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai