
செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரக் கோயிலுக்கான இணையதளத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகள், சனீஸ்வரர், ராகு கேது பகவான் கோயில்.
இந்தக் கோயிலைப் பற்றி பொதுமக்கள், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்தக் கோயில் இணையதளத்தைத் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கோயிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும்
www.27nakshatratemple.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.