

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை ரத சப்தமி விழா நடைபெற்றது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் எம்பெருமான் வீதிஉலா நடைபெறுகிறது. அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
இன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய ஜெயந்தி விழா நடைபெற்றது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனப் பக்தி கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சிறிய சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட 7 வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருள உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.