12 ராசிகளுக்கான இந்த வார (ஜனவரி 4 - ஜனவரி 10) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
செயல்களை நேர்த்தியாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நின்றுபோயிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தினருடன் பொழுதை அமைதியாகக் கழிப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து சுபச் செய்திகள் வந்து மகிழ்விக்கும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். வீடு வாகனங்கள் வாங்குவதற்காகச் செய்த விண்ணப்பங்கள் சாதகமாகும்.
வியாபாரிகளுக்கு பேச்சில் வசீகரம் கூடும். முன்னேற்றத்திற்கான தடைகள் விலகும். கூட்டாளிகளும் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபம் தொடரும்.
அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உட்கட்சிப் பூசலால் மனம் வருந்த நேரிடும். கட்சி மேலிடத்தில் உங்கள் மீது அபவாதமும் ஏற்படலாம். கலைத்துறையினர் தடைகளைத்தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வர். புகழும் கூடும், வருமானம் சீராக இருக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷமான நிலைமை நீடிக்கும். மாணவமணிகள் எப்பொழுதும் தங்களின் விடா முயற்சியினால் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும்.
பரிகாரம்: துர்க்கை வழிபாடு செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 5, 6.
சந்திராஷ்டமம்: 4.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்புகள் உருவாகும். நம்பிக்கைகள் பலப்படும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைப்பீர்கள். தேக ஆரோக்கியம் பலப்படும். முடிவெடுக்கப்படாமல் இருந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும்.
உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பார்கள். பணவரவுக்குத் தடைகள் ஏதும் இராது. வியாபாரிகள் கடுமையாக உழைத்து நல்ல பலனை எட்டுவீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். விவசாயிகள் சமூகத்தில் மதிப்பு கொள்முதலில் சிறப்பு, குடும்பத்தில் பொறுப்பு உண்டாகும்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் எதிலும் ஜெயம் தான். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றியைத் தரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
உறவினர்கள் அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபட்டு சிறந்த மதிப்பெண்களைப் பெறுவர். விடியற்காலையில் கல்விக்கான முயற்சியில் ஈடுபடவும்.
பரிகாரம்: ஹயக்ரீவரை தரிசனம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 4, 7.
சந்திராஷ்டமம்: 5, 6.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
செய்யும் செயல்களில் சிறிது தாமதம் ஏற்படலாம். எதிரிகள் சிறிது அடங்கிப் போவார்கள். வெளியிடங்களிலிருந்து இனிய செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் சேமிப்புக்கு இடமுண்டு. புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். முன்னேற்றத்திற்கான தடைகள் விலகும்.
வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விற்பனை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களும் உதவுவார்கள்.
பெண்மணிகளின் பொறுப்பற்ற பேச்சுகளால் குடும்பத்தில் சுமுகமான சூழல் பாதிக்கப்படும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம்.
பரிகாரம்: மஹாவிஷ்ணுவை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 4, 6.
சந்திராஷ்டமம்: 7, 8.
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
முயற்சிகள் நிறைவேறுவதில் தடை இராது. உறவினர்களுடன் மனக்கசப்புகள் தோன்றினாலும் சரியாகி விடும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் வீண்வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் நல்லபடியாக முடியும். விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவதில் தடங்கல்கள் ஏதும் ஏற்படாது, புதிய குத்தகை எடுக்கலாம்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். எனினும் புதிய முயற்சிகள் வேண்டாம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும்.
கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பிறகு கிடைத்து விடும். பெண்மணிகள் கணவரிடம் அன்யோன்யமாக இருப்பார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் நம்பி எதையும் கூற வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தி மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பரிகாரம்: "நமசிவாய' என்று தினமும் ஜபித்து வரவும்.
அனுகூலமான தினங்கள்: 4, 6.
சந்திராஷ்டமம்: 9, 10.
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சரியாக செய்து முடிப்பீர்கள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். உங்கள் வேலைத்திறன் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு நிறைந்து காணப்படும். வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் குறையும். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் செலவுகளை ஈடு செய்யும்.
அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றிகளைக் கொடுக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார்கள்.
பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். பேச்சில் உஷ்ண வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் மேலும் கவனம் செலுத்தவும். பலமுறைப்படித்து பயிற்சி செய்வதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 4, 5.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாது. நிம்மதி கொஞ்சம் குறைவுதான். சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு நிறைவேறிவிடும். சில நேரங்களில் விரயங்களும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பழகவும். லாபத்திற்குக் குறைவு இராது. விவசாயிகள் தாங்கள் நினைத்த வண்ணம் வேலைகளைச் செய்து முடிப்பார்கள். தானிய விற்பனையும் லாபகரமாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கட்சித் தலைமையின் பார்வையிலிருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினர் உயர்வுகளைக் காண்பார்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள்.
மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். சிறு இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோளை நோக்கி தைரியத்துடன் முன்னேறுவார்கள்.
பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 5, 8.
சந்திராஷ்டமம்:இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
உங்கள் செல்வாக்கு கூடும். உடல் ஆரோக்கியம் பலப்படும். மருத்துவச் செலவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். வீண் அலைச்சல்கள் ஏற்படாது. வரவேண்டிய பணம் தானாக வந்து சேரும். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக இருப்பார்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வியாரிகளுக்கு புதிய தொழில்கள் அனுகூலத்தைக் கொடுக்கும். கடையை அழகுப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை முனைந்து செயல்படுத்துவார்கள். மேலிட ஆதரவால் பதவிகள் தேடிவரும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை பெறுவர். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் தேடி வரும்.
பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறவும்.
பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 5, 6.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தி சுமாராக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இராது. சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உகந்த தருணமில்லை. காரியங்களை பலமுறை யோசித்து செயலாற்றவும். சிலருக்கு கண் சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சிறு இடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் யாவும் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகளுக்கு லாபம் சுமாராக வரும். புதிய முதலீடுகளில் யோசித்து இறங்கவும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் நற்பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இந்த காலகட்டத்தில் இறங்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்கவும். கவனத்துடன் செயலாற்றி கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறவும்.
பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்டபடி வேலைகளைச் செவ்வனே செய்வீர்கள். மாணவமணிகளுக்கு உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கும். சில இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோள்களை நோக்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயரை வணங்கவும்.
அனுகூலமான தினங்கள்: 7, 8.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
சோதனைகள் இருந்தாலும் நலன்கள் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அலைச்சல்கள் குறையும். உங்களிடமிருந்து விலகி இருந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். தெய்வ தரிசனம் மற்றும் மகான்களின் தரிசனம் கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் கொடுக்கும் பணிகளை திறம்படச் செய்வதில் சிரமம் ஏற்படும். மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தேடித்தராது. விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரம் மற்றும் கால்நடைகளால் லாபங்கள் இராது. செலவும் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடந்தால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். எதிரிகளிடமும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் வரும். பயன்படுத்திக்கொள்ளவும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான அன்யோன்யம் சற்று குறைவுதான். குழப்பங்கள் அதிகரிக்கும். மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால்தான் தேர்வுகளைச் சுலபமாக எதிர் நோக்கலாம்.
பரிகாரம்: செந்திலாண்டவரை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 6, 10.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
முன்னேற்றகரமான காலமிது. கவலைகள் குறையும் உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். உடன்பிறந்தோர் வகையில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளை சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர்களை பயிர் செய்வதால் கூடுதல் லாபத்தை அள்ளலாம்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருப்பார்கள். சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் மேற்கொள்ளவும். படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: மஹாலட்சுமியை நெய்தீபமேற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 5, 6.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உங்கள் மதிப்பு மரியாதை கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளிடம் மனக்கசப்பு நீங்கி கரிசனத்துடன் நடந்துகொள்வர். சக ஊழியர்களும் ஆதரவு கரம் நீட்டுவர்.
வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். தரமான பொருள்களை கொள்முதல் செய்வதில் நேரடியான கவனம் தேவை. விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டிவரும். கொள்முதல் லாபம் நன்றாகவே தொடரும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமாக செயல்படவும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
பெண்மணிகள் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறும் நேரமிது.
பரிகாரம்: அனுமனுக்கு சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 6, 10.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். முயற்சிகள் யாவும் வெற்றியைத் தரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலிலும் ஏற்றங்களைக் காண்பீர்கள். குறிக்கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றியடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலைகளில் குறைக்காணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் பெரிய சந்தைகள் மூலம் விற்பனையை பெருக்குவார்கள். புதிய முதலீடுளையும் செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கிட்டும். கடும் உழைப்பால் கூடுதல் விளைச்சலுக்கு வித்திடுவீர்கள். குத்தகைகளாலும் நல்ல வருமானம் வரும்.
அரசியல்வாதிகள் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமுறாமல் சீரிய முறையில் கடமைகளைச் செய்து வரவும். கலைத்துறையினரின் மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்கும்.
பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கவும். காகத்திற்கு அன்னமிடவும்.
அனுகூலமான தினங்கள்: 7, 9.
சந்திராஷ்டமம்: இல்லை.