அசையா சொத்து வாங்க உதவும் கிரகங்கள்!

செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் இந்த மூன்று கிரகங்கள் மட்டுமே. நான்காம் வீடு மட்டுமே
அசையா சொத்து வாங்க உதவும் கிரகங்கள்!
Published on
Updated on
2 min read

செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் இந்த மூன்று கிரகங்கள் மட்டுமே. நான்காம் வீடு மட்டுமே , ஒருவரின் ஜாதகத்தில் சொத்து வாங்க நான்காம் வீடு  முக்கிய வீடாகவும், மற்றும், நான்காம் வீட்டு அதிபதியான கிரகம் மட்டுமே தீர்மானம் செய்யும் கிரகம் ஆகவும் விளங்கும். ஒருவர், சொத்து வாங்க  நிலத்திற்கு காரகரான செவ்வாய், நிலத்தின் மேல் அழகாகக் கட்டப்படும் வீட்டிற்குக் காரகரான சுக்கிரன் மற்றும் தனத்திற்கு காரகரான குரு இவர்களும் காரணமாவார்கள். 

ஒரு ஜாதகர் ஒரு வீட்டை கட்டுவதற்கோ அல்லது கட்டிய வீட்டை வாங்குவதற்கோ அவர்களின் தசா காலத்தில் குரு, சுக்கிரன் அல்லது குரு , செவ்வாய் தொடர்பு கொண்டுள்ளபோதோ அல்லது கோச்சார ரீதியாக லக்கினம், நான்காம் வீடு, எட்டாம் வீடு, 12 ஆம் வீட்டுடன் எந்த வகையிலாவது தொடர்பு கொள்ளும் போது அமையும். எட்டாம் வீடு என்பது 4-க்கு 4-ஆக அமையும். 4-ஆம் வீடு, 8-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஒருவரின் ஜாதகத்தில் அவர் பெறும் வீட்டிற்கான அமைப்பு  நன்றாக இருப்பின் அவருக்கு வீடு நிச்சயம் என்பதைப் பறைசாற்றும். 

ஒருவரின் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பார் எனில் அவருக்கு ஒரு அழகான , அம்சமான வீடு அமையும். மிகவும் அழகான, அம்சமான வீடு மற்றும் எல்லா வசதிகளும் பெற்ற வீடு ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் சுக்கிரன் அல்லது குரு உச்சம் பெற்றிருப்பின் அமையப் பெறுவார்.  

தனகாரகராகிய குரு, வீடு பெறுவதற்கான ஒரு முக்கியமான கிரகம் ஆகும். குரு, ஒருவரின் ஜாதகத்தில் , 1, 4 , 8 , 10 இல் இருப்பின் அந்த ஜாதகர் வீடு பெறுவதென்பது நிச்சயம் நிகழும். அப்படிப்பட்ட குருவானவர் நீச்சம் பெற்று மேற்சொன்ன இடங்களில் இருப்பினும், ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் இருந்தாலும் அவருக்கு வீடு
அமையும் ஆனால் அந்த வீடு பழைய வீடாகவோ அல்லது அதிக கவர்ச்சி பெற்ற வீடாகவோ இல்லாமல் தான் அமையும். 

சதுர்த்தாம்சம் எனும் D -4 வர்க்க சக்கரத்தையும் கண்டு முடிவு செய்தல் நலம். மேற்சொன்னவாறே D - 4 சக்கரத்திலும் லக்கினம், நான்காம் வீடு அதன் அதிபதி, மற்றும் குரு , சுக்கிரன் போன்ற கிரகங்களின் நல்ல தொடர்பும் அவை D-1 சக்கரத்தின் அமைப்பையும் உற்று நோக்கி ஆழ்ந்து ஆய்வு செய்த பின்னரே வீடு பெறும் நிலையைக் காண முடியும். 

ஒருவர் அசையா சொத்து எனும் வீடு வாங்கும் போது அவர்களின் ஜாதகத்தில் உலாவும் செவ்வாய், ராகு, சனி, கேது இவர்களின் பங்கு:-

ஒருவரின் ஜாதகத்தில், நான்காம் அதிபதி எட்டில் இருப்பின் நிச்சயம் நிலம் சம்பந்தமான சொத்து வாங்க முடியும். அதுவே, அவர் செவ்வாய் ஆகிப் போனால் நிலம் சம்பந்தமான சொத்து வாங்கும் நிலை அதிகமாகும். இப்படி அமைவதால், ஒருவரின் பூர்வீக சொத்து கைக்குக் கிடைக்கும் பாக்கியம் பெறுவார். ராகு , நான்காம் வீட்டிலிருந்தால் கேடு விளைவிக்கும் அதுவே கேது இருந்தால் நன்மை பயக்கும். அதாவது அவர் சொத்து வாங்கி விற்கும் நிலையைப் பெறவோ அல்லது வாங்கி விற்கும் தொழில் செய்பவராகவோ அமையும். நான்காம் வீட்டில் சனி அல்லது சூரியன் இருப்பின் வீட்டைப் பற்றிய கவலை இருப்பதோடு அவர் வாடகை வீட்டிலேயே கழிக்க வேண்டியும் வரலாம். 

மேலும் D-4 எனும் சதுர்த்தாம்ச சக்கரத்தைப் பற்றி அறிய இம்மாதம் (ஜூன் 10, 11 தேதியில் வெளிவந்த கட்டுரைகளை வாசிக்கவும். 

சாயியைப் பணிவோம் எல்லா நலன்களும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com