விமானத்தில் வீதி உலா வரவிருக்கும் திருச்செந்தூர் முருகன்!

திருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம் செய்து சாதனை படைத்துள்ளார் சிற்பக்கலை சிற்பி விஜயகுமார். 
விமானத்தில் வீதி உலா வரவிருக்கும் திருச்செந்தூர் முருகன்!

திருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம் செய்து சாதனை படைத்துள்ளார் சிற்பக்கலை சிற்பி விஜயகுமார். 

கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோயில் சிலைகள் செய்வதற்குப் பிரபலம். இவ்வூரில் சோழசிற்பக் கலைக்கூடம் உள்ளது. இதன் உரிமையாளர் விஜயகுமார். புது டெல்லியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சிற்பக்கலை பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். 

இந்நிலையில், திருச்செந்தூரில் உள்ள பழமையான குமரன் கோயில் திருவிழாவில் சுவாமி வீதிவுலா புறப்பாட்டிற்காக இதுவரை யாரும் செய்யாத வகையில் ஏரோப்பிளைன்  வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 200 கிலோ எடையுள்ள பித்தளைகளைக் கொண்டு விமானம் வடிவத்தில் ஐந்தரை அடி அகலம், ஆறு அடி நீளத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் விஜயகுமார் ஸ்தபதி தலைமையில் ஐந்து பேர் கொண்டு குழுவினர் 2 மாதங்களாக இப்பணியைச் செய்து முடித்துள்ளனர்.

பணிகள் முடிவடைந்த நிலையில் திருச்செந்தூர் குமரன் கோயிலுக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்வரும் திருச்செந்தூர் திருவிழாவில் சுவாமி புறப்பாட்டிற்குப்  பயன்படுத்த உள்ளனர். 

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், 

சிற்பக்கலையில் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து இது தயாரிக்கப்பட்டது. விமானம் முழுவதும் பித்தளையால் ஆனது. இந்தியாவில் கடவுளுக்குப் பித்தளை விமானம் வாகனமாக அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது முழுக்க முழுக்க கையால் செய்யப்பட்டது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com