
மகா சிவராத்திரியையொட்டி திருச்சி அரியமங்கலம் காளி கோயிலில் அஹோரிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தினர்.
உய்யக்கொண்டான் ஆற்றங்கரையிலுள்ள இக்கோயில் அஹோரி மணிகண்டன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 20க்கும் மேற்பட்ட அஹோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு பூஜையில் பங்கேற்றனர்.
ஜெய் அஹோர காளிக்கும், கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏராளமானோர் சிவராத்திரி பூஜையில் பங்கேற்றனர்.