
திருவானைக்கா கோயிலில் நம்பிரான் கோச்செங்கட் சோழநாயனாரின் குரு பூஜை விழா இன்று கோயிலில் நடைபெறுகிறது.
சிலந்தியாக இருந்து சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்று பின்னர், கோச்செங்கட் சோழமன்னர் கட்டிய முதல் மாடக் கோயில் (யானை புக மண்டபம்) திருவானைக்கா கோயிலாகும்.
மாசி மாதம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்ததையொட்டி, அந்த நட்சத்திர நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை, மாலை 5 மணிக்கு கோயில் ஓதுவார் ஜெகனின் திருமுறை நிகழ்ச்சியும், திருவையாறு ரமணின் சொற்பொழிவும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு அலங்கரிக்கபட்ட ரதத்தில் கோச்செங்கட் சோழ நாயனாரின் உற்சவ திருமேனி புறப்பட்டு திருவீதி வலம் வருதல் நடைபெறுகிறது.இதனை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா தொடக்கி வைக்கிறார்.