தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னையா? இதோ அதற்கான பரிகாரங்கள்!

திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும்,  சண்டை போட்டுப் பிரிந்து..
தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னையா? இதோ அதற்கான பரிகாரங்கள்!

திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும்,  சண்டை போட்டுப் பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும்,  வேலை  காரணமாக கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபாரத்தில் பிரச்சனை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும்,  அனைத்து  பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் சுக்கிர பகவானை வணங்குவது சிறந்த பலனளிக்கும். காம தேவனான மன்மதனை வணங்குவதும் சிறந்த  பலனளிக்கும் என்பது நம்பிக்கை.

தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை தீர்க்கும் பரிகாரங்கள்

1. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்குக்  கோயில் உள்ளது. இந்த கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தாம்பத்திய பிரச்னைகள் தீரும்.

2. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தர ராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப்பேறு கிட்டும் என்பது  நம்பிக்கை.

3. சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு காம நாதீஸ்வரர்  என்று அழைக்கப்படுகிறார். இந்த தலத்து இறைவனையும் இறைவியையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர குடும்ப வாழ்வில் ஏற்படும் பிணக்குகள் நீங்கி  அன்னியோன்னியம் பிறக்கும்.

4. குமார சம்பவம் அதாவது முருகனின் திரு அவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை  எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி  அம்மனை தரிசித்துவரத் திருமண பாக்கியம் கிட்டுவதோடு தாம்பத்திய உறவும் நன்கு அமையும்.

5. மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு  சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாள நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான். இந்த தலத்தில் மன்மதனை வணங்கி வர காதல்  பிரச்னைகளும் தீரும்.

6. காஞ்சிபுரம் வராகீசுவரர் கோயில் மற்றும் காமேஸ்வரம் என விளங்கும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும் மற்றும் மன்மதன் வழிபட்டு,  எண்ணிய வரங்களைப் பெற்றமையால் இவ்விரைவருக்கு மன்மதேசஸ்வரர் எனும் பெயரும் உண்டு. மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராண படலத்துள்  உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. இத்தல இறைவன் மனத்தில் தோன்றிய மன்மதன் இறைவனை வணங்கி, நான் உயிர்கள் பிறப்பிற்கு காரணமான ஆண், பெண்  சேர்க்கையை உண்டாக்கி. ரதி தேவிக்கு இனியவனாய் ஈவோர் ஏற்போர்களுடைய உள்ளத்திலிருந்து அவற்றை (இச்சையை) செய்வித்து மூன்று உலகத்திலும் என்  ஆணையைச் செலுத்தும் வரத்தைக் கொடுத்தருள வேண்டுமென்று வேண்டினான். இறைவனார் "இதனை நீ காஞ்சியை அடைந்து, எம்மை வழிபட்டுப் பெறுவாயாக"  என்றுரைக்க, மன்மதன் அங்கனமே காஞ்சியை அடைந்து, சர்வ தீர்த்தக் கரையில் காமேஸ்வரன் என்னும் பெயரால் ஓர் லிங்கம் ஸ்தாபித்துப் பூஜித்துக் கேட்ட  வரங்களைப்பெற்றான் என்பது வரலாறு. மேலும், இங்கு தானம் வாங்குவோர், காமனை நினைந்து வாங்கினால், ஆசையால் வாங்கும் குற்றத்தினின்றும் நீங்கப்பெறுவர்  என்பது ஐதீகம்.

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் காமேஸ்வரம், சர்வ தீர்த்தக் கரையில் காமேஸ்வரர் கோவில்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில்,  சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தைக் கடந்து சற்று  தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம் 

அட! எங்க கிளம்பிட்டிங்க கணவனும் மனைவியுமாக? ரதி மற்றும் மன்மதனை வணங்கத்தானே?  வாழ்த்துக்கள்!!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com