
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் பங்குனி மாத பௌர்ணமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கருவறை ராகவேந்திரர், ஆஞ்சநேயர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பிருந்தாவனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயர், சத்தியநாராயணர், ராகவேந்திரர் ஆகிய உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பீடாதிபதி ரகோத்தம சுவாமி உற்சவர் சிலை
களுக்கு சத்திய நாராயண பூஜையை செய்தார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...