
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா நடைபெறும் இந்தாண்டுக்கான பங்குனி விழா இன்று காலை 5.30 மணிக்கு துவஜாரோகனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழா காலை மாலை என இரு வேளையிலும் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.
இன்று காலை 7.30-க்கு சப்பரத்தில் தீர்த்தீஸ்வரர் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...