குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 
குடியாத்தம்  கெங்கையம்மன்  கோயில்  திருவிழாவை  முன்னிட்டு  நடைபெற்ற  தேரோட்டம்.  (உள்படம்) தேரில்  வீதியுலா  வந்த  அம்மன்.
குடியாத்தம்  கெங்கையம்மன்  கோயில்  திருவிழாவை  முன்னிட்டு  நடைபெற்ற  தேரோட்டம்.  (உள்படம்) தேரில்  வீதியுலா  வந்த  அம்மன்.


குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 
இதையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் சிலை பொருத்தப்பட்டு காலை 9 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேர் கோபலாபுரம், அஞ்சுமன் தெரு, காந்தி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, ஆலியார் தெரு, தரணம்பேட்டை பஜார், கண்ணகி தெரு, ஜவாஹர்லால் தெரு வழியாகச் சென்று மாலை 6 மணியளவில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தின்போது பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை தேர் மீது போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஆய்வர் மா.சிவராமகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி இ.வடிவேல்துரை, தர்மகர்த்தா எம்.குப்புசாமி, நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தேருக்கு மாலைகள் 
கொண்டு செல்லும் நிகழ்ச்சி..
குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்திற்கு, நடுப்பேட்டை பெரிய வணிகர் வீதி விழாக்குழு சார்பில் அலங்கார மாலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கெங்கையம்மன் தேருக்கு வணிகர் வீதியில் உள்ள 
ஸ்ரீவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகிகள் சார்பில் ஆண்டுதோறும் அலங்கார மாலைகள், அம்மன் உற்சவ மாலைகள், சீர்வரிசைப் பொருள்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் தேரோட்டத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து அலங்கார  அம்மன் உற்சவ மாலைகள், சீர்வரிசைப் பொருள்கள் அதிர்வேட்டு முழங்க மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com