
மழை வேண்டி அம்மையார்குப்பம் சக்தியம்மனுக்கு பெண்கள் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து, வழிபட்டனர்.
ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார்குப்பத்தில் சக்தியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேக பூஜை செய்வது வழக்கம்.
இந்நிலையில், சித்திரை மாதத்தின் கடைசி நாளான செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெண்கள் மஞ்சள் நீர் குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சக்தியம்மன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் கணபதி, செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் கிருபாகரன் உட்ளிட்டோர் செய்திருந்தனர்.