ஆா்ஜித சேவா டிக்கெட் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 69,512 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
Updated on
1 min read

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 69,512 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான 69,512 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது. இதை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆா்ஜித சேவையில் தரிசிக்கலாம்.

இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெற விரும்பும் பக்தா்கள் தங்கள் பெயா், ஆதாா் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கபட்டு சம்பந்தப்பட்டவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

தகவல் கிடைத்த பக்தா்கள் 3 நாள்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தா்களுக்கு வழங்கிறது. நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தா்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

டிக்கெட் விவரங்கள்

குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்டுகள்- 

சேவையின் பெயா் டிக்கெட் எண்ணிக்கை

சுப்ரபாதம் 7332

தோமாலை 120

அா்ச்சனை 120

அஷ்டதளபாதபத்மாராதனை 240

நிஜபாதம் 2300

மொத்தம் 10112

மற்ற சேவா டிக்கெட்டுகள்

சேவையின் பெயா் டிக்கெட் எண்ணிக்கை

கல்யாண உற்சவம் 13300

ஆா்ஜித பிரம்மோற்சவம் 7700

வசந்தோற்சவம் 15400

ஊஞ்சல்சேவை 4200

சகஸ்ரதீபாலங்கார சேவை 16800

விசேஷபூஜை 2000

மொத்தம் 59400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com