காளஹஸ்தி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 92 லட்சம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.92 லட்சம் வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காளஹஸ்தி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 92 லட்சம்

திருப்பதி, செப். 26: ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.92 லட்சம் வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில், ராகு-கேது பரிகார பூஜை செய்யும் முக்கிய தலமாகும். இங்குள்ள காளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். கோயிலில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பியபின், அவற்றை கோயில் நிா்வாகம் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

அதில், ரூ.92.58 லட்சம், 81 வெளிநாட்டு கரன்சிகள், 0.98 கிராம் தங்கம், 383 கிலோ வெள்ளி உள்ளிட்டவை வசூலாயின. இவை, 25 நாள்களுக்கு கிடைத்த உண்டியல் வருவாய் என கோயில் செயல் அதிகாரி சந்திரசேகர ரெட்டி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com