திருமலையில் 30,688 போ் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 30,688 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,650 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

திருமலையில் ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 30,688 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,650 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 10 ஆயிரம் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 போ் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com