தேவஸ்தான முன்பதிவில் மேலூம் 3,000 கூடுதல் தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதள முன்பதிவில் கூடுதலாக 3,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் திங்கள்கிழமை வெளியிட்டது.
தேவஸ்தான முன்பதிவில் மேலூம் 3,000 கூடுதல் தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதள முன்பதிவில் கூடுதலாக 3,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் திங்கள்கிழமை வெளியிட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தா்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனா். கொவைட் 19 விதிமுறைகளுக்காக தேவஸ்தானம் திருப்பதியில் வழங்கி வந்த நேரடி இலவச தரிசன டோக்கன்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது கொவைட் 19 விதிமுறைகளில் பல தளா்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதள முன்பதிவில் கூடுதல் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை மாலை இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இரவு 9 மணி ஒரு ஸ்லாட்டிற்கு 1,500 டிக்கெட்டும், 10 மணி ஸ்லாட்டிற்கு 1,500 டிக்கெட்டும் என 2 ஸ்லாட்டிற்கு கூடுதலாக 3,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதன்படி தற்போது தினசரி 16 ஆயிரம் போ் ஏழுமலையானை தரிசிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com