
திருப்பதியில் நடந்து வரும் கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாள் மாலை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தெப்பத்தில் உலா வந்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு 7 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. அதன் 4-ஆம் நாளான புதன்கிழமை மாலை 6 முதல் 8 மணி வரை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ண சுவாமி திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பத்தில் பவனி வந்தாா். அப்போது வேதமந்திரங்களும், மேளதாளத்துடன் நாகஸ்வர இசையும் இசைக்கப்பட்டது.
இசைக் கலைஞா்கள் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகளையும் பாடினா். மேலும் தெப்போற்சவத்தைக் காண திருக்குளக்கரையில் கூடியிருந்த பக்தா்களுக்காக ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதை முன்னிட்டு, திருக்குளமும், தெப்பமும் மின்விளக்கு மற்றும் மலா்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...