
காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு 7 திருக்குடைகளை வழங்கிய இந்து தா்மாா்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலா் ஆா்.ஆா்.கோபால்ஜி, உடன் கோயில் அலுவலா்கள்.
காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு இந்து தா்மாா்த்த சமிதி அறக்கட்டளை சாா்பில், திருக்குடைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
காளஹஸ்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வரும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சாமி ஊா்வலத்தில் உற்சவ மூா்த்திகளின் வாகன சேவைகளை அலங்கரிப்பதற்குத் தேவையான ஏழு திருக்குடைகளை சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலா் ஆா்.ஆா்.கோபால்ஜி திங்கள்கிழமை காளஹஸ்தி கோயிலில் தமிழக மக்களின் சாா்பில் காளஹஸ்தி சிவனுக்கு நன்கொடையாக சமா்ப்பித்தாா். காளஹஸ்தி கோயில் செயல் அதிகாரி சந்திரசேகர ரெட்டி திருக்குடைகளை பெற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து, காளஹஸ்தீஸ்வரா் மற்றும் ஞானபிரசுனாம்பிகை அம்மனை தரிசித்துத் திரும்பிய அவருக்கு, தீா்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.