அலிபிரி சோதனைச் சாவடியில் பாஸ்டேக் முறை அமல்படுத்த ஆலோசனை

திருப்பதி அலிபிரியில் உள்ள சோதனைச் சாவடியில் பாஸ்டேக் முறையை அமல்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

திருப்பதி அலிபிரியில் உள்ள சோதனைச் சாவடியில் பாஸ்டேக் முறையை அமல்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியைக் கடந்து மட்டுமே செல்ல வேண்டும். இங்கு வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உள்படுத்தப்படுவதுடன், திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுச் சென்று வருகின்றன. மேலும், வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க நேரம் குறிப்பிடும் முறையும் அமலில் உள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு வர 40 நிமிடங்களும் ஒவ்வொரு வாகனங்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு முன் வேகமாகச் செல்லும் வானங்களுக்கு தேவஸ்தானம் அபராதம் விதித்து வருகிறது. அபராதம் செலுத்தத் தவறியவா்களின் வாகனம் அடுத்தமுறை திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்நிலையில், மத்திய அரசு தேசியநெடுஞ்சாலைகளில் ஏற்படுத்தியுள்ள வாகனச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க பாஸ்ட்டேக் முறையை அமல்படுத்தியுள்ளது. அதேபோல் திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியிலும் பாஸ்டேக் முறையை அமல்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. அவ்வாறு பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட்டால் வாகனச் சோதனைக்குப் பின், வாகனங்கள் கட்டணம் செலுத்தி செல்வதற்காக நிற்க வேண்டிய தேவை இருக்காது.

மேலும், வாகனம் தேவஸ்தானத்தின் வேகக் கட்டுப்பாட்டு விதியை மீறியிருப்பின், அபராதமும் உடனுக்குடன் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்பட்டு விடும். இதற்காக பராத ஸ்டேட் வங்கியிடம் தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

விரைவில் இதுகுறித்து முடிவெடுத்து தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com