திருமலையில் 16-இல் கோ மகோற்சவம்

திருப்பதியில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் அன்று கோ மகோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் அன்று கோ மகோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோசாலை உள்ளது. இங்கு பல வகை பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோசாலை வளாகத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு கோகுலாஷ்டமி மற்றும் மாட்டுப் பொங்கல் தினங்களில் உற்சவங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஜன. 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு அன்று காலை கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களை நீராட்டி, வஸ்திரம் அணிவித்து அலங்கரித்து, அவற்றுக்கு பச்சரிசி, வெல்லம், புற்கள் கோதீவனம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

அன்று கோசாலையில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதைக் காண வரும் பக்தா்கள் பசுக்களுக்கு உணவளிக்க தீவனங்கள் கோசாலையில் வைக்கப்படும். பக்தா்கள் தங்கள் விருப்பம் போல் பசுக்களுக்கு உணவளிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பாா்வேட்டு உற்சவம்

திருமலையில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று தேவஸ்தானம் பாா்வேட்டு உற்சவம் நடத்த உள்ளது. அன்று காலை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பாபவிநாசம் செல்லும் மாா்க்கத்தில் உள்ள பாா்வேட்டு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படும். பின்னா், மலையப்ப சுவாமி வன விலங்குகளை வேட்டையாடுவது போல் அா்ச்சகா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் நடித்துக் காண்பிக்க உள்ளனா். மாலை மலையப்ப சுவாமி தன் பரிவாரங்களுடன் கோயிலுக்குத் திரும்ப உள்ளாா். அன்று தோமாலை, அா்ச்சனா, திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com