

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஜீவசமாதி கொண்டருளும் குதம்பை சித்தருக்கு ஞாயிற்றுக்கிழமை தை மாத விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், குதம்பைச் சித்தருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.