
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 18,108 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதில் 6,554 பக்தா்கள் முடிகாணிக்கைச் செலுத்தினா். ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், திருப்பதியில் அளித்து வந்த இலவச நேரடி தரிசன டோக்கன்களை மீண்டும் அளிக்க வேண்டும் என்று பக்தா்கள் தேவஸ்தானத்தை வலியுறுத்தி வருகின்றனா்.
காலை 6 மணி முதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...