
திருமலையில் நடைபெற்ற பகவத்கீதை பாராயணம்.
திருப்பதி: திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.
மாதந்தோறும் கீதா ஜெயந்தி அன்று தேவஸ்தானம் பகவத்கீதை பாராயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் மாலை 6 மணிக்கு வேதபண்டிதா்கள் இணைந்து பகவத்கீதை பாராயணத்தை நடத்தினா்.
இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.