திருப்பம் தரும் திருமழிசை

திருப்பம் தரும் திருமழிசை

"தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர 

திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர், 

கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,

திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே".

- திருக்கச்சி நம்பிகள் 

கடவுளின் அருளோடு, மகம் நட்சத்திரத்தில் உதித்த திருமழிசை ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இந்த திருமழிசை. இவர் திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற புண்ணிய க்ஷேத்ரம். பல்வேறு இந்து  மத சமயத்தினரும் வாழ்ந்த செழிப்பான இந்த இடம் கி பி 1255ம் ஆண்டு கல்வெட்டில் கோவில்களுக்கு நிலம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு திருமழிசை அகராதில்  ஜெகநாத பெருமாள் கோவில் 12-13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொண்டை மண்டலம். 

மூலவராகவும் உற்சவராகவும் பெருமாள் காட்சி அளிக்கிறார். இங்கு அருள்மிகு ஜெகநாதப் பெருமாள், ருக்மணி சத்யப்பாமா  சமேதராக கிழக்கு முகமாக அருள் பாலிக்கிறார்கள். அங்கு பிருகு மார்க்கண்டேய மகரிஷி தவகோலத்தில் சேவிப்பவர்களாக கர்ப்ப கிரகத்திலேயே உள்ளனர். திருமகளும், என்கொல் என்னும் ஆழ்வார் பாசுரத்திற்கேற்ப தயார் இத்தலத்தில் திருமங்கைவல்லியாக கட்சியிளிக்கிறரார். தனி சன்னதியாக ஸ்ரீ பக்திஸாரர் எனப் பெயர் வழங்கப்படும் அருள்மிகு திருமழிசைப்பிரான், வைஷ்ணவி தாயார், தும்பிக்கை ஆழ்வார், அழகிய சிங்கர் சன்னதி, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனி சன்னதி, வாகன மண்டபம், பரமபத வாசல் என்று அனைத்து ஸ்வாமிகளும் ஆகம முறைப்படி அமைந்துள்ளது.

கோவிலில் பீகமுத்திரை ஆனபிறகு வெளியூர் பக்தர்கள் உள்ளிருக்கும் மூலவரைச் சேவிக்க முடியாது என்பதற்காக மற்ற வெளிநாட்டவர் சேவிக்க அதே நிலையில் வெளிபிராகரத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்கு உள்ள தலமரம் பாரிஜாதா விருட்சம், மற்றும் அழகிய பிருகு புஷ்கரணி ஆகும். புதுமையாகத் தோஷ மூர்த்தியாக ராகு கேதுவுடன் விநாயகர் காட்சி அளிக்கிறார்.

உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில் 

புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை

வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே 

வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசை ஒன்றினை மட்டும் தரிசித்தால் கிட்டும் பலன் ஏனைய சேத்திரங்களுக்குச் சென்று கிடைக்கக்கூடிய பலன்களைவிட மேம்பட்டது என்று திருக்கச்சி நம்பிகள் மேலே உள்ள தன் பாடல்களில் சுட்டிக்காட்டுகிறார்.
 
திருமழிசை ஆழ்வார்

வைணவ பன்னிரெண்டு ஆழவர்களில் ஒருவரான, நான்காவது ஆழ்வாராக திருமழிசைப்பிரான் இந்த ஊரில் பிறந்தவர். இவர்  அதிசய கடவுளின் சீடனாக இங்கு  திருமழிசை என்ற பெயரோடு இங்குத் தொண்டராக உதித்தார். திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம் கொண்டவர். இவர் பெருமாளின் அருளால் பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி அமையாருக்கும் மகனாகப் பிறந்து, பின்பு  உயிரற்ற நிலையில், பெற்றோரால் கைவிடப்பட்டு, பின்பு கடவுளின் அருளால் உயிர் பெற்று, பிரம்பறுக்க வந்த ஏழை திருவாளனின் வீட்டில் வளரப்பெற்றார். 

பிரிதொரு வேளாளர் குலத் தம்பதியர்கள் தினமும் திருமழிசைக்கு பால் கொண்டு தருவார்கள். பின்பு தாம் உண்டு சேஷித்த பாலின் மூலம் இளமையளிக்கவும், அவர்கள் ஒரு குழந்தை பெற, அக்குழந்தைக்கு கணிக்கண்ணன் என்ற பெயரோடு வளர்ந்தார். அவரை திருமழிசை தன் சீடராக ஆக்கிக் கொண்டார். திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி சன்னதி இந்த ஊரில் உள்ளது. இவரின் கட்டை விரல் நகத்தில் ஞானக் கண் பெற்றுள்ளார். இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்குப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார்.

ஒருமுறை ஆகாய மார்க்கத்தில் பார்வதியும் ஈஸ்வரனோடு ரிஷப வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கும் பொழுது திருமழிசை கண்டு பேசச் செய்தார்கள். பேச்சு வாதத்தில் வந்தது. ஆனால் திருமழிசையின் வார்த்தை ஜாலத்தையும் அவரின் பக்தியைக்  கண்டு சிவன் அவருக்கு பக்திஸாரர் என்று பாராட்டினார்.

இவர் வரலாறு பல அதிசயங்களுக்கு அப்பாற்பட்டது. முதலில் சைவ சமயத்தில் ஆர்வம் கொண்ட இவர் சிவவாக்கியர் என்ற பெயருடன் திகழ்ந்தார். பின்பு பேயாழ்வார் உபதேசங்களைக் கேட்க தொடங்கினார், அவரின் பக்தியின் துணையுடன் வைணவத்தை ஆராயத் தொடங்கினார். பேயாழ்வார் இவரை பக்திதாசன் என்றழைத்தார். இவர் காஞ்சிபுரம் சென்றதாகவும் அங்கிருந்து திவ்ய தேசத் திருத்தலங்களுக்குச் சென்று வைணவ மார்க்கத்தைப் பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இவரின் வரலாறு அதிசயம் மிக்க ஆன்மிக தேடலாகும். இவர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் நான்முகன் திருவந்தாதியையும், திருச்சந்த விருதத்தையும் பாடியுள்ளார். இவர் சைவம் வைணவம் என்று இருந்தரப்பிலும் பாடல் எழுதினார். முக்கியமாக இவர் திருவரங்கம், திருவல்லிக்கேணி, அன்பில், ஊரகம், எவ்வுள், கண்ணன் கபித்தலம் முதலான திருப்பதிகளைத்  தரிசித்து அவற்றை மங்கலாசாசனம் செய்துள்ளார்.  இவருடைய யோகதிசை நெடுநாள் சேவை பிறகு கும்பகோணத்தில் முக்தி அடைந்தார். நாராயணன் அருளோடு இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளாக ஆன்மீக தொண்டாற்றினார் நம் திருமழிசை ஆழ்வார்.

முக்கிய சிறப்பு விழாக்கள் 

பிரதி ஆண்டு ஆனி  மாத பெருமாளுக்கு பிரம்மோத்ஸவமும், ஐப்பசி மாதத்தில் மணவாள மாமுனி உத்ஸவமும், சித்திரை வருட பிறப்பு, தை மாத - மக நட்சரத்தில் ஸ்ரீ  திருமழிசை அவதார உற்சவம், 9ம் நாள் தேரோட்டம், ஆடி புரம், புரட்டாசி, திருக்கார்த்திகை, மார்கழி மாத கொண்டாட்டம், பங்குனி உத்திரம் வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத பூஜை, மாசி மாதத்தில் 3 நாள்கள் தெப்போத்ஸவமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பரிகாரம்

நினைத்த காரியம் ஜெயிக்க, திருமணம் நடைபெற, பிரிந்தவர்கள் சேர, முதிர்ந்த வயதில் திருச்சேவை செய்ய பலம் பெற, குழந்தை பாக்கியம், நோய் நிவர்த்தி, நாக தோஷ விலக அனைத்தும் இங்கு உள்ள பெருமாளையும் தாயாரையும் திருமழிசை ஆழ்வாரையும் மற்றும் அங்கு வீற்றிருக்கும் அனைத்து கடவுளையும் வணங்கித் தரிசிக்கவும். தற்பொழுது கும்பாபிஷேகம் செய்ய கோவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அவரவர் வீட்டு பிரச்னைகள் தீர, நம் தலைமுறைகளும் சுற்றம் சூழ சுபிக்க்ஷமாக இருக்க இத்திருத்தலங்களின் திருப்பணிக்கு நம்மால் ஆன சிறு சிறு உதவிகளைச் செய்ய வேண்டும். (044-26810542)

திருக்கோயில் இருப்பிடம் 

சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், பூவிருந்தவல்லிக்கு மேற்கே 3 கி.மீ தொலைவில், சென்னை திருப்பதி பேருந்து சாலையில் அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து போக்குவரத்து வசதியும் உண்டு. திருமழிசையில் அருள்மிகு ஜெகநாதப் பெருமாள், தரிசிக்கும்பொழுது அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரையும் ஒருங்கிணைந்து சென்று தரிசித்து கடவுளின் அருள் பெறலாம். 

ஜோதிட சிரோன்மணி தேவி 
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com