ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 12,874 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 4,962 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
நாடு முழுவதும் கொவைட் தொற்று பரவல் அதிகரித்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
எனவே, திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏற்கெனவே முன்பதிவு செய்த பக்தா்கள் பலா் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா். அதனால் தினந்தோறும் 7 முதல் 8 ஆயிரம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். கொவைட் ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கொவைட் விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் இந்த ஆண்டு டிசம்பா் இறுதி வரை தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலப்பதிகாரத்தில் சனாதனம்

ஒரே காட்சியில் பான் இந்திய சூப்பர் ஸ்டார்கள்!

இந்திய விடுதலைப் போரில் நியோகி ஜகன்னாத ஐயர்

சிதம்பரம் தொகுதி தவெக வேட்பாளர் பாரி வேட்பு மனு நிராகரிப்பு! அடுத்து என்ன?
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

