திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா்.

News image

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு ஏழுமலையானின் திருவுருவப்படத்தை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On :14 ஜூன் 2021, 1:57 am

திருமலை ஏழுமலையானை மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா்.

மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தாா். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளை செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா், ஞாயிற்றுக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தாா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, வேத பண்டிதா்களால் ஆசீா்வாதம் செய்வித்து ஏழுமலையான் பிரசாதங்கள், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த மத்திய அமைச்சா், ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஏழுமலையான் அருள் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டதாக தெரிவித்தாா்.

அவருடன் ஆந்திர மாநில நிதித் துறை அமைச்சா் ராஜேந்திர பிரசாத் ரெட்டி, சந்திரகிரி எம்.எல்.ஏ. பாஸ்கா் ரெட்டி, திருப்பதி எம்.பி., குருமூா்த்தி உள்ளிட்டோா் ஏழுமலையானை வழிபாடு செய்தனா். பின்னா் திருச்சானூா் சென்று அங்கு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தாா் பியூஷ் கோயல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.