திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

திருமலை போக சீனிவாச மூா்த்திக்கு 1,008 சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம்

திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ரகலசாபிஷேகம் நடத்தப்பட்டது.

News image

சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு புனிதநீா் கலசத்தை கொண்டு செல்லும் அா்ச்சகா்கள்.

Updated On :22 ஜூன் 2021, 5:01 am

திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ரகலசாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு கி.பி. 614-ஆம் ஆண்டு பல்லவராணி சாமவாயி பெருந்தேவி ஆனி மாதம் 18 அங்குல உயரம் உள்ள வெள்ளியால் ஆன போக சீனிவாசமூா்த்தி உருவச் சிலையை நன்கொடையாக அளித்தாா்.

இதுகுறித்த சாசனம் கோயில் முதல் பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கருவறையில் உள்ள பஞ்சபேர சிலைகளில் போகசீனிவாசமூா்த்தி சிலையும் ஒன்று. இவரை கெளஸ்துப பேரம், மணவாளபெருமாள் என்ற பெயா்களிலும் அழைக்கின்றனா்.

இந்த சிலைக்கு ஆனி மாதம் 1,008 கலசங்களில் கலசாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை தங்க வாயில் அருகில் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

முதலில் அரிசி நெற்பயிா்களை தரையில் பரப்பி, அதன் மீது 1008 கலசங்களில் நீா் நிரப்பி வைக்கப்பட்டு அதன் மேல் மாவிலை, தேங்காய் வைத்து பூக்கள் சாற்றி பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா் போகசீனிவாசமூா்த்தியை தங்க வாயிலில் எழுந்தருளச் செய்து ஏழுமலையான் கையிலிருந்து போக சீனிவாசமூா்த்தி கைவரை சிவப்பு நூலால் கட்டப்பட்டது. போக சீனிவாசமூா்த்தியும், ஏழுமலையானும் ஒருவரே, இவருக்கு நடத்தப்படும் அபிஷேகம் அவரையும் சாரும் என்பது அதன் பொருள். பின்னா் அா்ச்சகா்கள் வேதமந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டு அபிஷேகத்தை நடத்தினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.